Ayyanar Thunai Serial: விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா வீட்டை விட்டு எங்கேயும் போகக்கூடாது என்று பாசத்தை காட்டி செண்டிமெண்டாக சோழன் குடும்பத்தில் இருப்பவர்கள் லாக் பண்ணி விட்டார்கள். முக்கியமாக நிலா மற்றும் பல்லவனின் ஒற்றுமை ரொம்பவே சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு இவர்களுடைய காம்போ மக்களை கவர்ந்து விட்டது.
அதனால் நிலாவும் சோழன் வீட்டில் தங்குவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இருந்தாலும் சின்ன சின்ன தேவைகளை செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணிய அண்ணன் தம்பிகள் முதலில் நிலாவுக்கு தேவையான ஒரு பாத்ரூமை கட்டிக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். இதனைத் தொடர்ந்து நிலாவுக்கு ஒரு சர்ப்ரைஸ் பண்ணும் விதமாக சோழன் காலேஜுக்கு கூட்டிட்டு போகிறார்.
அங்கே போனதும் நிலாவுக்கு தேவையான சர்டிபிகேட் அனைத்தும் கிடைத்துவிட்டது. இதனை பார்த்து சந்தோஷப்படும் நிலா, அடுத்தடுத்து வேலையில் சேர்ந்து கனவை நினைவாக வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். அடுத்ததாக கார்த்திகாவின் கல்யாணம் சேரனை ரொம்பவே பாதித்துவிட்டது. இதனால் தனியாக பீல் பண்ணிக் கொண்டிருக்கும் சேரனை பார்த்து நிலா மற்றும் தம்பிகளா அனைவரும் வருத்தப்படுகிறார்கள்.
அந்த சமயத்தில் கார்த்திகா, வீட்டை விட்டு ஓடி சேரனை பார்த்து பேசுவதற்கு வருகிறார். அப்படி வந்ததும் தம்பிகள், கார்த்திகாவை பார்த்து ஏன் இங்கே வந்து எங்க அண்ணனை இன்னும் அதிகமாக கஷ்டப்படுத்துறீங்க என்று திட்ட ஆரம்பித்து விட்டார்கள். உடனே கார்த்திகா என்னால் சேரன் மாமாவை மறந்து வேறு ஒருவரை கல்யாணம் பண்ண முடியாது. என்னை எப்படியாவது சேரன் மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வைத்து விடுங்கள் என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டார்.
உடனே நிலா, சேரணையும் கார்த்திகாவையும் யோசித்துப் பார்த்து இவர்களை ஒன்று சேர்த்து வைக்கலாம் என முடிவு பண்ணிவிட்டார். அதனால் இப்பொழுதே கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று சேரனை மாப்பிள்ளை கோலத்தில் வேட்டி சட்டையை போட்டு வர வைத்து கார்த்திகாவின் கழுத்தில் தாலி கட்ட சொல்லுகிறார்கள்.
சேரனும் கார்த்திகா கழுத்தில் வீட்டில் வைத்தே தாலி கட்டி முடிக்கிறார். இதனால் கார்த்திகா குடும்பத்தில் பிரச்சனை பண்ணினாலும் கார்த்திகாவின் முழு சம்மதத்துடன் இந்த கல்யாணம் நடந்ததால் பெருசாக எந்த பூகம்பமும் வெடிக்க வாய்ப்பு இல்லை. அந்த வகையில் நிலாவை தொடர்ந்து அடுத்து கார்த்திகாவும் அந்த வீட்டில் வாழ தயாராகி விட்டார்.