Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சிட்டி மற்றும் தினேஷிடம், ரோகிணி வசமாக சிக்கிக் கொண்டார். அதனால் தினேஷ் ரோகிணிக்கு கடைசியாக வைத்த செக் என்று சொல்லி 10 லட்ச ரூபாய் பணத்தை கேட்டு மிரட்டுகிறார். அப்படி கொடுக்கவில்லை என்றால் முத்துவிடம் உனக்கு நடந்த முதல் கல்யாணத்தைப் பற்றியும் உன்னுடைய பையன் பற்றிய விஷயத்தையும் சொல்லிவிடுவேன் என்று சொல்கிறார்.
இதனால் பயந்து போன ரோகிணி, 10 லட்ச ரூபாய் பணத்தை எப்படி ஏற்பாடு பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சீதாவின் கல்யாணத்திற்காக மீனா மற்றும் சுருதி கடைக்கு போயிட்டு வந்து நகைகளை வாங்கிட்டு வந்ததாக ரோகினிடம் சொல்லி அதை பூஜை ரூமில் வைத்து விடுகிறார்கள்.
இதை பார்த்ததும் தில்லாலங்கடி வேலையை யோசித்த ரோகிணி, புத்தி மழுங்கி போனது போல் இந்த நகை வைத்து தினேஷ் வாயை அடைத்து விடலாம் என்று முடிவு எடுத்து விட்டார். இந்த நகையில் நாம் கை வைத்தால் மாட்டிக் கொள்வோம் என்று சுதாகரித்துக் கொண்ட ரோகினி, தினேஷுக்கு போன் பண்ணி பூஜை ரூமில் நகை இருக்கிறது. அதை நீ வந்து எடுத்துட்டு போ என்று தகவலை சொல்லி விடுகிறார்.
இதைக்கேட்ட சிட்டி, தினேஷிடம் நல்ல ஐடியாவாக இருக்கிறது. ஏனென்றால் நமக்கு பணமும் கிடைத்த மாதிரி இருக்கும், சீதாவின் கல்யாணத்தில் பிரச்சனையும் வந்துவிடும். பிறகு பணத்துக்காக சத்யா நம்மிடம் வந்து நிற்பான் என்று சொல்லி தினேஷை திருடுவதற்கு அனுப்பி வைக்கிறார். அந்த சமயத்தில் ரோகிணியும் தினேஷுக்கு போன் பண்ணி வீட்டில் யாரும் இல்லை எடுத்துக் கொள் என்று சொல்கிறார்.
அப்படி தினேஷ் வீட்டுக்குள் நுழைந்து பூஜை ரூமில் இருந்த நகைகளை எடுத்துட்டு வெளியே வரும்பொழுது மனோஜ் வீட்டிற்குள் போனதும் திருடன் என்று கத்தி பிடிப்பதற்கு முயற்சி எடுக்கிறார். அந்த சமயத்தில் மனோஜ் நம்மை பார்த்து விடக்கூடாது என்பதற்காக தினேஷ் கையில் வைத்திருந்த இன்னொரு முகமூடியை மனோஜ் முகத்தில் போட்டு விடுகிறார்.
அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்த மீனா மற்றும் ஸ்ருதியிடம் மாட்டிக் கொண்டார். ஆனால் இவர்கள், மனோஜ் முகத்தை பார்க்காமல் மனோஜ் திருடன் என்று நம்பி சுருதி அடித்து வெளுத்து விட்டார். இன்னொரு பக்கம் தினேஷும் மீனா மற்றும் சுருதி இடம் அடி வாங்கிவிட்டார். அத்துடன் தினேஷ் கையில் இருந்த நகையை மீனா காப்பாற்றி விட்டார். பிறகு மனோஜ் மட்டும் அங்கு இருந்த நிலையில் சுருதி மறுபடியும் மனோஜை அடித்து முகமூடியை கழட்டி பார்க்கிறார்.
அப்பொழுது தான் தெரிகிறது மனோஜ் என்று, உடனே மனோஜ் தான் திருட வந்தானோ என்று எல்லோரும் ஒரு நிமிடத்தில் யோசித்து விட்டார்கள். பிறகு மனோஜ் நடந்த விஷயத்தை சொன்ன பிறகு தான் இங்கே நகை இருந்தது என்று எப்படி வெளி ஆட்களுக்கு தெரிந்தது. அப்படி என்றால் இங்கு உள்ளவர்கள் தான் யாரோ இந்த திருட்டு வேலையை பார்த்திருக்கிறார்கள் என்று முத்து மீனாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
ஏற்கனவே முத்துவின் கார் விபத்தான போது கார் சாவி எப்படி இங்கிருந்து போனது என்ற விஷயத்தில் ரோகினி மீது முத்துவிற்கு சந்தேகம் வந்தது. தற்போது இந்த விஷயத்திலும் ரோகினி மீது தான் முத்து மீனாவுக்கு சந்தேகம் வரப்போகிறது. இன்னும் கூடிய சீக்கிரத்தில் ரோகினி ஆட்டம் களைய போகிறது.