Vijay : விஜய் இப்போது ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். இந்த படத்தில் திரிஷா கேமியோ கதாபாத்திரத்தில் வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் பல வருடங்களாக விஜய், திரிஷா பற்றிய கிசுகிசுக்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது.
பொன்னியின் செல்வன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த திரிஷா விஜயுடன் மீண்டும் லியோ படத்தில் நடித்திருந்தார். இதனால் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே பிரச்சனை வந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலாவ தொடங்கியது.
இப்படி இருக்கையில் சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது த்ரிஷா விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும்படி திரிஷாவும் ஒரு பதிவு போட்டிருந்தார்.
திரிஷாவை புகைப்படம் எடுத்த விஜய்

இந்த சூழலில் நேற்றைய தினம் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ள பீனிக்ஸ் படத்தை விஜய் பாராட்டி இருக்கிறார். அப்போது இயக்குனர் அனல் அரசு மற்றும் சூர்யாவுடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.
அதில் விஜய் அணிந்திருந்த ஷூவை பார்த்த நெட்டிசன்கள் த்ரிஷாவின் புகைப்படத்திலும் இதே ஷூ தெரிந்ததை கண்டுபிடித்துள்ளனர். விஜய் சமீபகாலமாக இந்த ஷூவை பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
அப்படி என்றால் திரிஷாவின் அந்த புகைப்படத்தை விஜய் தான் எடுத்திருக்கிறார் என்ற உறுதி செய்துள்ளனர். சும்மாவே மெல்லும் வாய்க்கு இந்த புகைப்படம் வெத்தலை போடுவது போல் கிடைத்திருக்கிறது. மேலும் விஜய் மூலமாக த்ரிஷா அரசியலில் நுழைய இருப்பதாகவும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.