Vijay: இப்போது விஜய் பல பேருக்கு பெரும் தலைவலியாக மாறிப் போயிருக்கிறார். திரையுலகில் தான் பெரிய ஹீரோக்களுக்கு டஃப்கொடுக்கும் வகையில் அவருடைய வளர்ச்சி இருந்தது.
தற்போது பல வருடங்களாக பழம் தின்னு கொட்டை போட்ட கட்சிகள் கூட இவரால் ஆட்டம் கண்டு போயிருக்கிறது. இதற்கு காரணம் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தான்.
இவருடைய அரசியல் வருகை ஆரம்பத்தில் சாதாரணமாக தான் பார்க்கப்பட்டது. ஆனால் போகப் போக இவருக்கு மக்களுக்கு இருக்கும் செல்வாக்கை கண்டு மற்ற கட்சிகள் கொஞ்சம் தடுமாறித்தான் போயிருக்கிறது.
அதிலும் விஜய் தன்னுடைய அரசியல் எதிரி ஆளும் கட்சி தான் என்பதை தெளிவாக சொல்லிவிட்டார். அதிலிருந்து இவர்களுக்குள் ஆடு புலி ஆட்டம் தொடங்கிவிட்டது. எப்படி எல்லாம் விஜய்யை ஒழித்துக் கட்ட வேண்டும் என ஆளும் கட்சி தரப்பு திட்டம் போட்டு விட்டது.
டிஜிட்டல் மாஃபியாவுக்கு பறந்த உத்தரவு
அதில் ஒன்றுதான் அவருடைய கேரக்டரை அசிங்கப்படுத்துவது. தேவையில்லாமல் ஒரு நடிகையோட அவரை சேர்த்து வைத்து பேசும் இழிவான வேலையை ஆளும் கட்சி பார்ப்பதாக வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி ஓப்பன் ஆக தெரிவித்துள்ளார்.
அதற்காக டிஜிட்டல் மாஃபியா என்னும் இணையதள கூலிப்படையை வைத்து ஆட்டத்தை தொடங்கி இருக்கின்றனர். அவர்களும் முடிந்த அளவிற்கு விஜய் பெயரை கெடுக்கும் விதமாக பல ட்வீட் போட்டு வருகின்றனர்.
பனையூர் பண்ணையார், மீடியாக்களை சந்திக்க பயம், வெளியில் வர மாட்டார் அறிக்கை சைக்கோ மோசமாக அவரை சித்தரித்து வருகின்றனர். இதற்கு விஜய் கட்சியினரும் அவ்வப்போது தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இக்கட்சியில் உள்ளவர்களை தங்கள் கட்சிக்கு இழுக்கும் வேலையும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களை வைத்து விஜய்யை இழிவுபடுத்தும் செயலையும் செய்கின்றனர்.
எது எப்படியோ ஆனால் அவருடைய கேரக்டரை அசிங்கப்படுத்துவது சரி கிடையாது. ஆளும் கட்சி இதைத்தான் செய்கிறார்கள் என பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.