ரஜினியின் கூலி படம் 99 சதவீதம் முடிந்துவிட்டது. ஒரு சில பட்டி டிங்கரிங் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்துக்கு ரஜினிக்கு சம்பளமாக 120 கோடிகள் பேசப்பட்டுள்ளது. இதுவரை ரஜினி 50 கோடிகள் மட்டுமே வாங்கியுள்ளார்.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் அடுத்தும் ரஜினியை வைத்து இயக்கும் படம் ஜெய்லர் 2. இப்படி இருக்கையில் கூலி படத்தில் ரஜினி வாங்கிய சம்பளத்தை விட 30 கோடிகள் சேர்த்து 150 கோடிகள் கொடுக்க திட்டமிட்டுள்ளனர் சன் பிக்சர்ஸ்.
இப்பொழுது கூலி படத்தின் வியாபாரம் நன்றாக போய் உள்ளது. டிஜிட்டல், சேட்டிலைட் என இதன் பிசினஸ் செமையாய் கல்லாகட்டி உள்ளது. டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் விலை பேசி சுமார் 120 கோடிகளுக்கு வாங்கியுள்ளது.
கூலி படத்தின் சேட்டிலைட் உரிமைகளை சன் பிக்சர்ஸ் 90 கோடிகளுக்கு வாங்கி இருக்கிறார்கள். இதனால் ரஜினி 120 கோடிகளுக்கு மேல் சம்பளம் கேட்டுள்ளார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. சுதாரித்துக் கொண்ட சன் பிக்சர்ஸ் இப்பவே இதற்கு ஒரு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
ரஜினி அதிக சம்பளம் கேட்டாரோ இல்லையோ ஆனால் இப்பொழுதே சன் பிக்சர்ஸ் ஒரு பேச்சை போட்டு வைத்துள்ளது. கூலி படம் வியாபாரம் ஆவதற்கு முழு காரணம் ரஜினி மட்டும் கிடையாது, இந்த படத்தின் கூட்டணி தான். லோகேஷ் கனகராஜ் இயக்குவதாலும், நாகர்ஜுனா, அமீர்கான் போன்ற ஆர்ட்டிஸ்டிகள் நடிப்பதாலும் தான் இந்த அளவுக்கு வியாபாரமாகியுள்ளது என வார்த்தைகளை போட்டு வருகிறார்கள்