Serial Trp Rating List: ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல்கள் அதிக புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் வெளியான டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியுடன் போட்டி போட்டு விஜய் டிவி சீரியல்களும் முந்தி கொண்டது.
அதாவது முதல் ஐந்து இடத்தில் சன் டிவி சீரியல்கள் தான் தொடர்ந்து ஆக்ரமித்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக முதல் மூன்று இடங்களில் மட்டுமே சன் டிவி சீரியல்கள் இடம் பிடித்திருக்கிறது. அடுத்து விஜய் டிவி சீரியல்கள் தான் முன்னேறி இருக்கிறது.
மருமகள் மற்றும் மூன்று முடிச்சு: இந்த மகா சங்கமத்தை எதிர்பார்க்கவில்லை என்பதற்கு ஏற்ப மருமகள் மற்றும் மூன்று முடிச்சு இரண்டு சீரியலும் தூள் கிளப்பிவிட்டது. முக்கியமாக ஜோடியாக இருக்கும் நந்தினி சூர்யா மற்றும் பிரபு ஆதிரையின் கேரக்டர்கள் பார்ப்பவர்களை கவர்ந்து விட்டது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் 10.07 புள்ளிகளை பெற்று முதலிடத்தை அடைந்திருக்கிறது.
சிங்க பெண்ணே: ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்திருந்த சிங்க பெண்ணே சீரியல் தற்போது பாழாகிவிட்டது என்பதற்கு ஏற்ப ஆனந்தியின் கர்ப்பம் விஷயம் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், எப்பொழுது இந்த விஷயம் மகேஷ் மற்றும் அன்புக்கு தெரியும்.
ஆனந்தி கழுத்தில் யார் தாலி கட்ட போகிறார் என்ற பல கேள்விகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் ஜவ்வு மாதிரி ஒரு விஷயத்தையே பல மாதங்களாக இழுத்து வருவதால் இந்த சீரியல் பரிதாபமாக நிற்கிறது. டிஆர்பி ரேட்டிங்கில் 9.98 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
கயல்: மூர்த்தியின் பிசினஸ்காக எழில் கயல் இரண்டு பேரும் சேர்ந்து சமையல் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று அண்ணன் அண்ணியின் ஆசையை நிறைவேற்றுகிறார்கள். எப்பொழுதுமே கயலுக்கு தன்னுடைய குடும்பத்தை பற்றி மட்டும் தான் நினைப்பு இருக்கிறது. எழில் பற்றிய சிந்தனையே இல்லாமல் சுயநலமாக இருப்பது பார்ப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.59 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
சிறகடிக்கும் ஆசை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த ஒரு சீரியல் தான் பல வருடங்களாக முதலிடத்தில் இருக்கிறது. அதிலும் சில மாதங்களாக சன் டிவியுடன் போட்டி போடும் விதமாக டிஆர்பி ரேட்டிங்கில் நான்காவது இடத்தை பிடித்து விடுகிறது. அதே மாதிரி இந்த வாரமும் 8.05 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
அய்யனார் துணை: இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தகுந்த முக்கியத்துவம் கொடுத்து எதார்த்தமான நடிப்பை காட்டி மக்களின் பேராதரவை பெற்றுவிட்டது. இந்த சீரியல் தான் விஜய் டிவியின் ஃபேவரிட் சீரியல் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் தூக்கி கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் 7.78 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.