இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் வெளியானது. 3 கோடி முதல் 300 கோடி வரை பட்ஜெட்டில் வந்த படங்களில் ஹீரோக்களுக்கு சமமாக ஹீரோயின்களும் கலக்கினர். சம்பள விவாதம் இருந்தாலும், மார்க்கெட் பாக்ஸ் ஆபிஸை தான் தீர்மானிக்கிறது. இந்த ஆறு மாதங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய டாப் 6 நடிகைகள் பற்றி பார்க்கலாம்.
த்ரிஷா/ சிம்ரன்
த்ரிஷா மற்றும் சிம்ரன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனி சாயலுடன் வலம் வருபவர்கள். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘விடாமுயற்சி’, ‘தக் லைஃப்’ போன்ற படங்களில் அவர்களின் பங்களிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தனது 100 சதவீதத்தை கொடுத்து தொடர்ந்து நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் த்ரிஷா மாஸ் தான்.
பூஜா ஹெக்டே
படங்களில் கவர்ச்சி அம்சத்தால் புகழ்பெற்ற பூஜா ஹெக்டே, ‘ரெட்ரோ’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஹோம்லி லுக்கில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். டார்க் மேக்கப், பழைய ஸ்டைல் ஆடைகள் என ஸ்ரீதேவி ஸ்டைலில் செம்ம நடிப்பை வெளிக்காட்டினார். இது அவரது ரசிகர்கள் பட்டாளத்தில் புதிய ஓர் முகத்தை உருவாக்கியது.
சுவாசிகா
‘மாமன்’ படத்தில் சூரியின் சகோதரியாக நடித்த சுவாசிகா, தனது இயற்கையான மற்றும் உணர்ச்சி மிகுந்த நடிப்பால் ரசிகர்களை கண்கலங்க வைத்தார். தம்பி இறந்து விட்டான் என மகனை காப்பாற்றும் சீன்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. கிராமங்களிலும் நகரங்களிலும் இந்த பாசக்கார அம்மாவின் நடிப்பு படம் ஹிட்டாக காரணமாக இருந்தது.
துஷாரா விஜயன்
‘வீர தீர சூரன்’ படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் தன்னுடைய தனிச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். ரவுண்டு கட்டி நடித்து, இளமை தோற்றத்துடன் கதாபாத்திரத்தை உயிரோட்டமாக செய்தார். மற்ற படங்களில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்காத சூழலில், இந்த சந்தர்ப்பத்தை சிறப்பாக பயன்படுத்தினார்.
சான்வி மேக்னா
‘குடும்பஸ்தன்’ படத்தில் சான்வி மேக்னா நடிப்பே முழு ரசிகர்களையும் கவர்ந்த ஹைலைட். மனைவியாக தனது சாமர்த்தியமும், நயனாரியையும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிக்காட்டியுள்ளார். நைட்டி லுக்கிலும் கணவருடன் காட்டிய கெமிஸ்ட்ரி ரசிகர்களை இன்னும் பல படங்களில் அவரை பார்க்க தூண்டுகிறது.