மிடில் கிளாஸ் அப்பாவின் கனவு.. 3BHK எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம் – Cinemapettai

Tamil Cinema News

3BHK Twitter Review: ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சாந்தி டாக்கிஸ் தயாரிப்பில் 3BHK இன்று வெளியாகி இருக்கிறது. சித்தார்த், சரத்குமார், தேவயானி என பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

மிடில் கிளாஸ் அப்பாவின் கனவு 3BHK எப்படி இருக்கு ட்விட்டர் விமர்சனம்.webp

சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற நடுத்தர வர்க்கத்து அப்பாவின் கனவு தான் இப்படத்தின் கதை. ஏற்கனவே பத்திரிக்கையாளர்கள் ஷோ நடைபெற்று அதன் விமர்சனங்கள் பாராட்டுகளை குவித்தது.

1751616439 269 மிடில் கிளாஸ் அப்பாவின் கனவு 3BHK எப்படி இருக்கு ட்விட்டர் விமர்சனம்.webp

அதைத்தொடர்ந்து இன்று படத்தை பார்த்த ஆடியன்ஸ் நல்ல ஒரு ஃபீல் குட் படம் பார்த்த உணர்வு இருப்பதாக பாராட்டி வருகின்றனர். அதேபோல் சரத்குமாரின் கதாபாத்திரமும் அவர் நடிப்பும் ரொம்பவே அருமையாக இருக்கிறது என ஆடியன்ஸ் கருத்து தெரிவித்துள்ளனர்.

1751616439 490 மிடில் கிளாஸ் அப்பாவின் கனவு 3BHK எப்படி இருக்கு ட்விட்டர் விமர்சனம்.webp

அதேபோல் சித்தா படத்திற்கு பிறகு நல்ல ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்திருக்கிறார் சித்தார்த். கனவு தேவதை தேவயானி மிடில் கிளாஸ் குடும்ப தலைவியாக அசத்தி இருக்கிறார்.

ட்விட்டர் விமர்சனம்

மீதா ரகுநாத் கதாபாத்திரமும் கதைக்கு சப்போர்ட்டாக இருக்கிறது. படத்தின் முதல் பாதி சென்டிமென்ட் கலந்து ரொம்பவும் எமோஷனலாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.

1751616439 510 மிடில் கிளாஸ் அப்பாவின் கனவு 3BHK எப்படி இருக்கு ட்விட்டர் விமர்சனம்.webp

ஆனால் இரண்டாம் பாதியில் ஆடியன்ஸோடு கனெக்ட் ஆகி இறுதி காட்சி பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாக இருக்கிறது. ரொம்பவும் மெதுவாக நகரும் கதைதான். ஆனால் திரைக்கதை சுவாரசியத்தை கொடுத்திருக்கிறது.

1751616440 675 மிடில் கிளாஸ் அப்பாவின் கனவு 3BHK எப்படி இருக்கு ட்விட்டர் விமர்சனம்.webp

அதனால் தாராளமாக படத்தை பார்க்கலாம் என ஆடியன்ஸ் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். இப்படி பாசிட்டிவ் விமர்சனங்கள் வரும் நிலையில் அடுத்தடுத்த காட்சிகளின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து வசூல் இருக்கும்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.