ஸ்ரீ ரெட்டி – ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது இந்த பெயர். தமிழ் நடிகர்களின் வண்டவாளத்தை புட்டு புட்டு வைத்து அவர்களின் மானத்தை கப்பலேட்டியவர் ஸ்ரீ ரெட்டி. ஆடை இல்லாத போராட்டம் கூட நடத்தி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
2011 காலகட்டங்களில் தெலுங்கு சினிமாவில் “நேணு நன்ன அபதம்” படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் 2013 ஆம் ஆண்டு அரவிந்த் 2 என்ற படத்தில் நடித்தார். மொத்தமாய் அவர் நடித்தது இரண்டே படங்கள் தான்.
ஒரு நடிகையாக அறியப்பட்ட அவர் தமிழ் சினிமாவில் தன்னை நிறைய பேர் ஏமாற்றிவிட்டார்கள் என குண்டை தூக்கி போட்டார். தமிழ் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என நடிகர் ஸ்ரீகாந்த், விஷால், ஏ ஆர் முருகதாஸ் போன்றவர்கள் தன்னை பயன்படுத்திக்கொண்டனர் என குற்றம் சாட்டினார்.
இதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் கூட அந்த நடிகர்களின் ரகசிய அடையாளங்களை கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இப்பொழுது குமுதம் பத்திரிகைக்காக நேர்காணலில், “நான் அந்த காலத்தில் வெளியிட்ட பெயர்கள் எல்லாம் இப்பொழுது மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள்” எனக் கூறி தன்னுடைய குமுறல்களை வெளிப்படுத்துகிறார்.
குறிப்பாக விஷால், ஸ்ரீகாந்த் போன்றவர்களை பல பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டுள்ளது. அதைப்போல் ஏ ஆர் முருகதாஸும் நல்ல ஒரு நிலைமையில் இல்லை. இவர்களை எல்லாம் கர்மா சுற்றி அடிக்கிறது என அந்த பேட்டியில் கூறியுள்ளார். அப்பவே இவர்களைப் பற்றி தான் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார் ஸ்ரீ ரெட்டி.