3BHK Movie Review: எல்லா படங்களும் மனதுக்கு நெருக்கமாக இருக்காது. சில படங்களை பார்த்தாலே நம்ம வாழ்க்கையும் இப்படித்தானே இருக்கு என ஃபீல் பண்ண வைக்கும். அப்படி ஒரு படம் தான் 3BHK.
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார் நடிப்பில் இன்று படம் வெளியாகி இருக்கிறது. இது ஆடியன்ஸை இம்ப்ரஸ் செய்ததா? தியேட்டரில் பார்க்கலாமா? என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.
வாடகை வீட்டில் வசித்து வரும் சரத்குமாருக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பெரும் கனவு. அவருடைய இந்த கனவை நிறைவேற்ற மனைவி தேவயானி பிள்ளைகள் சித்தார்த், மீதா ரகுநாத் என அனைவரும் உறுதுணையாக இருக்கின்றனர்.
ஆனால் நடுத்தர வர்க்கத்து மனிதனுக்கு இந்த சொந்த வீடு அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அப்படி இந்த கனவை அவர்கள் எட்டிப் பிடித்தார்களா? இந்த கனவுக்கு தடையாக வந்தது என்ன? என்பதை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
3BHK முழு விமர்சனம்
எல்லோருக்குமே சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது ஒரு லட்சியமாக இருக்கும். அதற்காக கஷ்டப்பட்டு பேங்க் லோன் வாங்கி வீட்டையும் வாங்கி விடுவார்கள். ஆனால் அந்த கடனை அடைத்து முழுதாக வீடு நமக்கே சொந்தம் என்ற நிலையை எட்டுவதற்குள் அவர்கள் பல்வேறு கஷ்டங்களை சந்திக்க நேரிடும்.
அதை அப்படியே படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் வாடகை வீட்டின் கஷ்டங்கள், ஹவுஸ் ஓனர் டார்ச்சர் என ரியல் லைப்பில் நடக்கும் விஷயங்களை காட்சிப்படுத்தி இருப்பது பாராட்டப்பட வேண்டியது.
அதற்கேற்றார் போல் சரத்குமார் சித்தார்த் நடிப்பு கதாபாத்திரமாகவே நமக்கு தெரிகிறது. ஆனால் தேவயானியின் கேரக்டர் இன்னும் கொஞ்சம் ஆழமாக பதிவு செய்திருக்கலாம். அதேபோல் இரண்டாம் பாதி நிஜ வாழ்க்கையை ஓவர் டேக் செய்து சினிமா பாணியில் இருப்பது நெருடல்.
இருந்தாலும் அழகான கிளைமாக்ஸ் நல்ல ஒரு உணர்வை கொடுக்கிறது. சொந்த வீடு என்பது கனவோ கௌரவமோ கிடையாது அது நம்முடைய சுயமரியாதை என்பதை இப்படம் சொல்லி இருக்கிறது.
அதேபோல் ஆடியன்ஸ் நம்ம வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கு என நிச்சயம் ஃபீல் செய்வார்கள். அப்படி எதார்த்தத்தின் படைப்பாகவும் சில இடங்களில் சினிமா டச்சும் கலந்து இருக்கிறது இந்த 3BHK.
சினிமா பேட்டை ரேட்டிங் : 3.25/5