Arya: காவலாளி அஜித் குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கும் விஷயம் தமிழக முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோது திடீர் போராளிகளான நடிகர்கள் எல்லாம் இப்போது வாயை திறக்காமல் இருக்கிறார்கள் என்பதை எல்லோருடைய குற்றச்சாட்டுமாக இருக்கிறது. இந்த சமயத்தில் தான் ஆர்யா பத்திரிகையாளர்களிடம் வசமாக சிக்கி இருக்கிறார்.
ஆர்யாவின் அசத்தல் பதில்
தன்னுடைய பட ப்ரொமோஷனுக்காக மீடியாவை சந்தித்த ஆர்யாவிடம் திருப்புவனம் அஜித் குமார் கொலை பற்றி கேட்கப்பட்டது. இதற்கு ஆர்யா கொஞ்சமும் சலனம் இல்லாமல் வேற கேள்வி கேளுங்க என்கிறார். மீண்டும் அந்த கேள்வியை கேட்ட போது கூட பிடி கொடுக்காமல் நெக்ஸ்ட் என்ன என கேட்கிறார்.
தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு ஈவு இரக்கமற்ற சம்பவத்திற்கு வருத்தம் அளிக்கிறது என்ற பதிலையாவது சொல்லி இருக்கலாம். பாவம் அவரும் என்ன செய்வார், இனி அவருடைய படத்தை வாங்கி விலை பேச வேண்டும் என்றால் அது உதயநிதியிடம் மட்டும் தானே சாத்தியம்.
அதனால் தான் என்னவோ மனித மாண்பையும் மறந்து விட்டு அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி காட்டிக் கொள்கிறார் போல. உண்மை வாழ்க்கையில் தன்னுடைய சுயநலத்திற்காக அநீதிக்கு எதிராக கூட குரல் எழுப்ப முடியவில்லை. திரையில் ஹீரோயினை கேலி செய்யும் வில்லனை மட்டும் பறந்து அடித்து மிரட்டுகிறார்கள் இந்த போலி ஹீரோக்கள்.