Ajith Kumar: நடிகர் அஜித்குமாருக்கு சினிமாவை தாண்டி கார் ரேஸ் மீது அலாதி பிரியம் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். சில வருடங்களுக்கு முன்பு நடந்த கோர விபத்தால் அஜித் கார் ரேஸ் பக்கம் திரும்பாமல் இருந்தார்.
ஆனால் 50 வயதில் சூப்பர் கம் பேக் கொடுத்து கிட்டத்தட்ட பல கிலோ உடல் எடையை குறைத்து இப்போது கார் ரேஸில் தன்னுடைய அணியை கலக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த விஷயமே அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய பெருமையை கொடுத்து இருக்கிறது.
அஜித்குமாரின் நீண்ட நாள் ஆசை
அதிலும் இந்த போட்டிகளின் போது அவர் இந்திய கொடியுடன் வருவது இந்தியாவுக்கே பெருமை சேர்த்ததால் தான் அவருக்கு தற்போது பத்மஸ்ரீ விருதே கொடுத்தார்கள். அப்படி இருக்கும் போது அஜித்துக்கு இன்னொரு கனவும் இருக்கிறதாம்.
எப்1, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் நடிக்க தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அஜித் குமாரை போல் ஒரு ஹீரோவை தேடிக் கொண்டிருக்கும் ஹாலிவுட் இயக்குனர்கள் இந்த பேட்டியை பார்த்தால் கண்டிப்பாக அவரை கொக்கு போல் தூக்கி விடுவார்கள்.
அஜித்தின் இந்த கனவு நிறைவேறிவிட்டால் அது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெரிய பெருமை. அவரே ஆசைப்படும்போது ஹாலிவுட் அவரை தேடி வராமலா போய்விடும். விரைவில் அந்த அப்டேட் காகவும் நாம் காத்திருப்போம்.