Dhanush : புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததடுத்தாக நிறைய படம் தன் கைவசம் வைத்துள்ளார்.இவர் நடித்து வெளிவந்துருக்கும் படங்கள் பெரும்பாலானவை கோடிக்கணக்கில் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இனி வரும் படங்களும் அதே போல் தான் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறிருக்க இடைஇடையே ஏகப்பட்ட பிரச்சினை. ஆனால் இவரது சொந்த பிரச்சினை அனைத்துமே இவரது சினிமா துறையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
நல்லவனுக்கு நல்லவன்,கெட்டவனுக்கு கெட்டவன் என்ற பாணியில் இருந்து வருகிறார் தனுஷ். அந்த வகையில் தற்போது தான் நடிக்கவிருக்கும் வடசென்னை 2 படத்தில் சிம்பு நடிக்க போவதை அறிந்த தனுஷ் நஷ்டஈடு கேட்டதாக தகவல் பரவியது. அதையெல்லாம் உண்மை அல்ல என்று தவிடுபொடி ஆக்கிவிட்டார் தனுஷ். இந்த செயல் மூலம் தன் பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
சூர்யா படத்தில் தனுஷா..
இது ஒருபக்கம் இருக்க சூர்யா வெற்றிமாறன் கூட்டணியில் தயாராகும் வாடிவாசல் படம் ட்ராப் ஆனதை அடுத்து இந்த படத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்பிருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் அளித்த நேர்காணல் ஒன்றில் உடைத்து பேசியுள்ளார்.
அதாவது வடசென்னை 2 படத்தில் சிம்பு நடிப்பதால் இதில் எள்ளளவும் தனுஷ் அவர்கள் ஈடுபடமாட்டார் என்றும், வாடிவாசல் படம் ட்ராப் ஆனதை அடுத்து வெற்றிமாறன் அவர்கள் தனுஷை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள்,சிம்பு வடசென்னை 2 கதை கேட்டு ஒரே வாரத்தில் ஓகே சொல்லிவிட்டாராம் அதற்கு வடசென்னை படம் ஏற்கனவே வெற்றிப்படம் இதை மையமாக கொண்ட கதையில் நடித்தால் தானும் ஒரு வெற்றி படம் கொடுத்தத்தக்க இருக்கும் என எண்ணி சிம்பு அவர்கள் உடனே ஓகே சொல்லியிருப்பார் எனவும் கூறியுள்ளார்.