ராமாயணத்தை மையமாக வைத்து பல திரைப்படங்கள் உருவாகியுள்ளன. அதில் முக்கியமாக பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ குறிப்பிடத்தக்கது. தற்போது, ரன்பிர் கபூர் நடித்திருக்கும் புதிய ‘ராமாயணா’ படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இப்படத்தை நிதேஷ் டிவாரி இயக்கி வருகிறார். ரன்பிர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். கதாபாத்திரத் தேர்வு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹன்ஸ் சிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர். சமீபத்தில் வெளியாகிய கிலிம்ப்ஸ் வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது படம் மீது இருக்கும் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
பட்ஜெட்
ராமாயணா திரைப்படத்தை நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ரூ. 800 கோடி பட்ஜெட்டாக கூறப்பட்ட இந்த படம் குறித்து, தற்போது உண்மையான விவரம் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
பாலிவுட் வட்டார தகவலின்படி, ராமாயணா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. முழுப் பட்ஜெட்டாக ரூ. 1600 கோடி செலவழிக்கப்படுவதால், இது இந்திய சினிமாவின் மிக விலை உயர்ந்த படமாக இருக்கிறது. இப்படம் தயாரிப்பு தரத்திலும், காட்சிப் பிரம்மாவிலும் சிறப்பாக அமைய உள்ளது.
இப்படத்தின் முதல் பாகம் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு, இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுகுறித்து வெளியாகியுள்ளது. இதன் மூலம் ராமாயணா இந்திய சினிமாவின் மைல்கல்லாக அமைவது உறுதி.