News : ஜூன் 27 அன்று ஒரு இளைஞன் மர்மமான முறையில் காவல் நிலையத்தில் உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை, திருப்புவனப் பகுதியில் காவலாளியாக இருந்த 27 வயது அஜித்குமாரை புகாரின் பேரில் கைது செய்து போலீஸ் விசாரணை செய்தது. அடுத்த நாள் விசாரணையில் அஜித் குமார் மர்மமாக இருந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்ட தற்போது மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி விசாரணை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.
நியாயம் கிடைக்குமா..??
அஜித் குமார் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வலைத்தளங்களில் அனைவரும் குரல் எழுப்புக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது வலை பேச்சு பாலா என்பவரின் கேள்வி பார்ப்பவர்கள் அனைவரையும் சிந்தனைக்கு உள்ளாக்கியுள்ளது.
இது நியாயமா..??
எந்த செய்தி ட்ரெண்டிங்கில் வந்தாலும் வலைத்தளத்தில் உடனே அப்டேட் செய்து விடும் இயக்குனர்கள் ஏன் அஜித்தின் விஷயத்தில் ஒரு சின்ன கண்டனம், ஒரு சின்ன துண்டறிக்கை, அல்லது ஆடியோ, வீடியோ கிளிப் கூட போடவில்லை. அதை வைத்து கதை எழுதி படம் எடுக்க சொல்லவில்லை. ஆனால் அதை எதிர்த்து குரல் கொடுக்கலாம் சினிமாவில் ரொம்ப அநியாயம் பண்றாங்க- விமர்சகர் பாலா