இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள சிலர், திரையின் பின்புறத்தில் பயணத்தை தொடங்கியவர்கள். இயக்குநர்களுக்கு உதவி இயக்குனராக இருந்த பின், திரையில் ஹீரோக்களாக வெற்றி பெற்றனர். அப்படியான பிரபலங்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
கார்த்தி
சிவகுமாரின் மகன் கார்த்தி, சினிமாவில் தனது பயணத்தை அயுத எழுத்து படத்தில் மணிரத்னத்துக்கு உதவி இயக்குநராக துவங்கினார். பின்னர் பருத்திவீரன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி புகழ் பெற்றார். அதன் பிறகு, காற்று வெளியிடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
ரவி மோகன்
ஜெயம் ரவி, 2003ம் ஆண்டு ஜெயம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். எடிட்டர் மோகனின் மகனும், இயக்குனர் ராஜாவின் தம்பியுமான இவர், நடிப்புக்கு முன் ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
சித்தார்த்
ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் சித்தார்த் தனது நடிகராகும் பயணத்தை தொடங்கினார். அதற்கு முன்னர், அவர் மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பிறகு தமிழ், தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்தார்.
விஷால்
விஷால், நடிகராக அறிமுகமாவது முன் அர்ஜுன் சர்ஜா இயக்கிய வேதம் மற்றும் ஏழுமலை படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். 2004ல் செல்லமே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் இரும்புத்திரை படத்தில் அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ளார்.
சசிகுமார்
சசிகுமார், சேது படம் மூலம் பாலாவுக்கு உதவி இயக்குனராக சினிமாவில் முதன்முறை கலந்துகொண்டார். பின்னர் ஆமீர் மற்றும் ராம் ஆகியோருடன் பணியாற்றினார். 2008ல் சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியும், அதில் கதாநாயகனாகவும் debut செய்து ரசிகர்களை கவர்ந்தார்.