Suriya Sethupathi: திண்ணையில இருந்தவனுக்கு திடுக்குன்னு அடிச்சதாம் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தை பல அனுபவங்களை பார்த்தவர்களாலேயே பக்குவமாய் கொண்டு செல்ல முடியாது.
ஒரு 19 வயது இளைஞனுக்கு திடீரென தமிழ் சினிமாவின் ஹீரோ வாய்ப்பு கிடைத்தால் அவர் மட்டும் அதை எப்படி பக்குவமாய் கையாள முடியும். கடந்த சில மாதங்களாகவே விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி மீது காரணமே இல்லாமல் இணையதளங்களில் வன்மம் ஏறுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஒட்டுமொத்த தமிழ்நாடும் மக்கள் செல்வன் என்று தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் மகனை இந்த அளவுக்கு கேலி கிண்டல் செய்ய என்ன காரணம் என்று நாம் யோசித்து இருக்க மாட்டோம்.
நேரில் பார்த்ததை பகிர்ந்த பிரபலம்
இதற்கான காரணத்தை சூர்யா சேதுபதியை நேரில் பார்த்த பிரபலம் ஒருவர் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன பீனிக்ஸ் படத்தை பார்ப்பதற்கு வலைப்பேச்சு பிஸ்மி ரோகிணி திரையரங்கம் சென்று இருக்கிறார்.
அப்போது படத்தின் ஹீரோ சூர்யா சேதுபதியும் அந்த தியேட்டருக்கு வந்திருக்கிறார். சூர்யா சேதுபதிக்கு இது முதல் படம், அவரை கடந்து செல்லும் மக்களும் ஆஹா ஓஹோ என்று அவரிடம் நெருங்கி போவதற்கு வாய்ப்பு இல்லை. சிலருக்கு அவரை அடையாளம் கூட தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் கூட வந்த கூட்டம் ஏதோ கட்டுக்கடங்காத கூட்டத்திலிருந்து பெரிய ஹீரோவை மீட்டுச் செல்வது போல் பாவனை கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சூரியா சேதுபதி எங்கு சென்றாலும் இந்த கூட்டம் அவரை ஆஹா ஓஹோ என்று பேசுவதும் விசில் அடிப்பதும், கைதட்டுவதுமாக இருக்கிறதாம்.
வாழ்க்கையில் பக்குவப்பட்டவர்களுக்கு எதற்காக இவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று புரியும். இப்போது தான் சினிமா வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்திருக்கும் சூர்யா சேதுபதிக்கு இது அவ்வளவாக புரிய வாய்ப்பில்லை.
இந்தக் கூட்டத்தினர் ஏற்றி விடுவதால் அவர் தன்னுடைய ஆட்டிடியூடை அதிகம் காட்ட வேண்டியது இருக்கிறது. இதை பார்க்கும் இணையதள வாசிகளுக்கு எதுக்கு இந்த பையனுக்கு இவ்வளவு ஆரவாரம், இவனை வச்சு செஞ்சு ஆகணும் என முடிவு பண்ணி ட்ரோல் மெட்டீரியல் ஆக்குகிறார்கள்.
பிஸ்மி இந்த விஷயத்தை சொல்லும்போது, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கூட இருந்த நாலு பேர் பில்டப் கொடுத்து என்னை இப்படி ஆக்கிட்டாங்க என்று சிவனாண்டி கேரக்டரில் நடித்த சத்யராஜ் ஞாபகம் தான் வருகிறது.