TV Channels: இப்போதெல்லாம் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. எல்லாமே எதார்த்தத்தை மீறிய நிகழ்ச்சிகளாக இருக்கிறது. கைத்தட்டல் வேண்டும் டிஆர்பி வேண்டும் என்பதற்காகவே பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
விவாத நிகழ்ச்சியில் தொடங்கி பல ரியாலிட்டி ஷோக்கள் இப்படித்தான் இருக்கிறது. அதில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் ஆடியன்ஸ் வரவேற்பு அதிகமாக இருந்தது.
ஆனால் இப்போது பார்த்தால் இது என்ன டிராமா என கேட்கும் அளவுக்கு நிகழ்ச்சியின் போக்கு உள்ளது. அப்படித்தான் தற்போது டான்ஸ் ஆட சொன்னா தலையில் பாட்டிலை உடைத்து ஸ்டண்ட் வேலை காட்டி இருக்கிறார்கள்.
டிஆர்பிக்காக ஓவரா போகும் சேனல்
முன்னதாக ரவீனா அதிக ஆர்வத்தில் கீழே விழுந்து மூக்கு வாயை உடைத்துக் கொண்டது நினைவிருக்கலாம். அப்படித்தான் தற்போது பாட்டில் வைத்து வித்தை காட்டி இருக்கிறார்கள். இதை பார்க்கும் போது ஐயோ செமையா பண்றாங்க அப்படி எல்லாம் தோன்றவில்லை.
எதுக்கு இவ்வளவு ரிஸ்க் நடனம் மூலம் அனைவரையும் இம்ப்ரஸ் செய்ய முடியாதா. இப்படி எல்லாம் செய்து தான் மார்க் வாங்கணுமா என்றுதான் கேட்க தோன்றுகிறது.
அந்த வீடியோ தற்போது பரவி வரும் நிலையில் கமெண்ட்கள் கூட இப்படித்தான் இருக்கிறது. இனியாவது சின்னத்திரை சேனல்கள் டிஆர்பி வேட்டைக்காக இது போன்ற ஆர்வக்கோளாறுகளை தடுக்குமா பார்ப்போம்.