நடிகர் மணிகண்டன், பீட்சா 2 படத்தில் உதவி இயக்குநராக தமிழ்சினிமாவில் அறிமுகமானார். பின்னர் இந்தியா பாகிஸ்தான், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2010-ம் ஆண்டு காலா படத்தில் ரஜினிகாந்தின் மகனாக நடித்தது இவருக்கு முக்கியமான அங்கீகாரம் கிடைக்கச் செய்தது.
நெற்றிக்கண், ஜெய்பீம் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த மணிகண்டன், 2023-ல் குட் நைட் மூலம் ஹீரோவாக வெற்றி பெற்றார். அதன் பின் லவ்வர் படமும் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம், அவருக்கு ஹாட்ரிக் வெற்றியைத் தந்தது.
இளம் ஹீரோவாக தனக்கென இடம் பெற்றுள்ள மணிகண்டன், சமீபத்தில் ஒரு Youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்தார். நம்மை வெறுப்பவர்கள், நமக்கு நெருங்கியவர்களாகவே இருப்பார்கள் என்றும், நமது உண்மை கேரக்டரை தெரியாமலே அவர்கள் நம்மை மதிப்பீடு செய்வார்கள் என்றும் கூறினார்.
அதற்கான உண்மை, நம்மைச் சுற்றியுள்ள நண்பர்களிடம் கேட்டாலே புரியும் என நினைவூட்டினார். நெருங்கிய நண்பனே கூட, “முதலில் உன்னை பற்றி இப்படிதான் நினைத்தேன்” என தப்பாக புரிந்ததை சொல்வார்.
நம்மை வெறுப்பவர்களும் ஒருநாள் நம்மை உணரும்போது அந்த வெறுப்பு மறைந்து விடும். வெற்றி முக்கியம் தான், ஆனால் தோல்வியே எங்கு தவறு ஏற்பட்டது என்பதை உணர்த்தும் உண்மை ஆசிரியர். தோல்வியடைந்தால் அவனை தகுதி இல்லாதவனாக சித்தரிக்கும் தன்மை சமூகத்தில் அதிகம்.
கிரிக்கெட் வீரர் ரன் அடிக்காமலிருந்தாலோ, விக்கெட் எடுக்காமலிருந்தாலோ கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். தோல்வியடைந்தவர்களை வெறுக்கத்தக்கவர்களாக மாற்றும் இந்த இணையப் பாரம்பரியம் வருத்தமளிக்கிறது என மணிகண்டன் தெரிவித்துள்ளார்.