Super star : வயசானாலும் இன்னும் கெத்து போகாமல் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்த வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
என்னதான் சினிமாவில் நடிகர்கள் டாப் இடத்தில் இருந்தாலும், அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை வாங்கிட மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டு தான் வருகின்றனர். அதே மாதிரி ரஜினிகாந்த் என்று சொன்னாலே சினிமாவில் ஒரு மிகப்பெரிய மதிப்பும் இருக்கிறது.
அஜித்தின் பேச்சு..
இந்நிலையில் தல அஜித் ரஜினியை பற்றி பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
“சினிமாவில் எவ்வளவு பெரிய உயரத்தை தொட்ட ஒருவர் எளிமையாக இருப்பது மிகப்பெரிய ஆச்சரியம். மூளைக்கும் மனதுக்கும் போராட்டம் நடக்கும்போது மனது சொல்வதை தான் கேட்க வேண்டும் என்பது ரஜினி சாரின் வேதம். கடந்த ஆட்சியில் முதலமைச்சர் பாராட்டு விழாவில் நான் மேடையில் பேசுவதற்கு குறிப்பு எடுத்துட்டு போனேன். ஆனால் நான் பேசியது ரஜினி சார் சொன்ன மாதிரி என் மனதை கேட்டு தான்.
சினிமாவில் ரஜினி சார் இடத்துக்கு வேறொருவர் வர முடியாது. ரஜினி சார் துரோணச்சாரியர், அவருக்கு அடுத்து அர்ஜுனன் இடத்தில் வேண்டுமானால் இன்னோரு ஹீரோ வரலாம்.
துரோணச்சாரியாரிடம் எனக்கொரு வேண்டுகோள்– ரஜினி சார் ஹீரோவாக நான் வில்லனாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது- நடிகர் அஜித்“. இப்படி ரஜினியை பற்றி அஜித் பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் ஒரு புயலை கிளப்பியது.