இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நடைபெற்றது. இந்த போட்டியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி. மொத்தமாக 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்தில், இந்திய கொடியை பறக்க செய்தது.
இந்த தொடருக்கு முன் இந்திய அணியை பற்றி இங்கிலாந்து தரக்குறைவாய் பேசி வந்தது. இந்திய அணியை நாங்கள் White wash செய்வோம், ஆசஸ் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் நாங்கள் விளையாட போகும் பயிற்சி போட்டி தான் இது. மற்றபடி இந்த தொடர் எங்களுக்கு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இங்கிலாந்து வீரர்கள் கூறியிருந்தனர்.
அவர்கள் பேசியதற்கு ஏற்ப முதல் டெஸ்ட் போட்டியில் 370 ரண்களை சேஸ் செய்து இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா பெரிய வெற்றி பெற்று அவர்களுக்கு பதிலடி கொடுத்தது. தோல்விக்கு பிறகும் இங்கிலாந்து கேப்டன் ஸ்ட்ரோக்ஸ் காலரை தூக்கி விட்டு பேசி வருகிறார்.
இரண்டு இடத்தில் நாங்கள் வீழ்ந்து விட்டோம், இல்லை என்றால் இந்தியாவை முடித்திருப்போம் என இப்பொழுதும் மார்தட்டி வருகிறார். முதலாவதாக ஆடிய இந்தியா 200 ரண்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்பொழுதே நாங்கள் சுதாரித்திருக்க வேண்டும். ஜடேஜா நின்று எங்களுக்கு தலைவலி கொடுத்து விட்டார்.
மேலும் நாங்கள் இரண்டு இன்னிங்ஸிலும் 80 ரண்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இதுதான் இந்தியாவை டிரைவர் சீட்டில் அமர வைத்தது. அங்கிருந்து அவர்கள் சுதாரித்துக் கொண்டு போட்டியை அவர்கள் பக்கம் மாற்றினார்கள். மேலும் இந்தியா ஒரு உலகத்தரம் வாய்ந்த அணி, அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டோம் என தோல்விக்கு பின் மழுப்பல் பேச்சு பேசுகிறார் ஸ்ட்ரோக்ஸ்.