Suriya: அண்மைக்காலமாக சமூகத்தில் நடந்து வரும் பல பிரச்சனைகள் குறித்து நடிகர்கள் யாரும் வாய் திறப்பதில்லை. இது இப்போது கடும் விமர்சனமாக மாறி இருக்கிறது.
சினிமாவில் மட்டும் அநியாயத்திற்கு எதிராக பொங்கும் இவர்கள் நிஜ வாழ்க்கையில் மௌனமாக இருப்பது ஏன் என்ற கேள்வியும் முளைத்துள்ளது. அதில் சமீபத்தில் நடந்த திருப்புவனம் இளைஞர் காவல் மரணம் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விவகாரத்தில் ஒரு நடிகர் கூட கேள்வி எழுப்பவில்லை. ஆனால் முந்தைய ஆட்சியில் சாத்தான்குளம் விவகாரத்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்து நியாயம் கேட்டனர். ஆனால் இப்போது அவர்கள் அனைவரும் எங்களுக்கு என்ன வந்தது என இருக்கின்றனர்.
நடிகர்களா கொத்தடிமைகளா.?
இதை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ரவிச்சந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜெய் பீம் படம் இது போன்ற லாக்கப் டெத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது தான். அப்படி ஒரு படம் எடுத்து கோடி கோடியாக சம்பாதித்தார்கள்.
ஆனால் இப்போது அதே போன்று சம்பவம் நடந்ததற்கு யாரும் வாய் திறக்கவில்லை. சிவக்குமார் குடும்பம் எங்கே போச்சு சூர்யா, ஜோதிகா என்ன பண்றாங்க என காட்டமாக அவர் கேள்வி கேட்டுள்ளார்.
அது மட்டும் இன்றி எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லும் சத்யராஜ், நியாயம் பேசும் பிரகாஷ்ராஜ் எல்லோரும் இப்போது எங்கே போனாங்க. யாராவது பொய் சொன்னா அடிப்பேன் என்று பேசின சித்தார்த் இப்ப எங்க இருக்காரு, நடிகர்களா கொத்தடிமைகளா என ஆவேசத்துடன் பேசி இருக்கிறார்.
சுருக்கமாக சொல்லப்போனால் மக்கள் மனதில் இருக்கும் ஆதங்கம்தான் இது. இப்பதான் எங்க மனசுல இருந்த பாரமே குறைந்து போச்சு என நினைக்கும் அளவுக்கு வெளுத்து வாங்கி இருக்கிறார்.
யார் என்ன பேசினாலும் இந்த நடிகர்கள் வாய் திறக்கப் போவதில்லை. சமீபத்தில் கூட ஆர்யாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அவர் நெக்ஸ்ட் என அடுத்த கேள்விக்கு தாவி விட்டார்.
அதேபோல் சூர்யா தன் மனைவியுடன் ஜாலி ட்ரிப் சென்ற போட்டோ கூட வைரலானது. இதையெல்லாம் பார்த்து கொதித்துப் போன ரசிகர்கள் எல்லாருடைய படத்தையும் புறக்கணிக்க வேண்டும் என கொந்தளிக்கின்றனர்.