1992-ல் வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய், தொடக்கத்தில் தந்தை சந்திரசேகரின் படங்களில் தொடர்ந்து நடித்தார். பின்னர் பிற இயக்குநர்களுடன் பணியாற்றத் தொடங்கி, பூவே உனக்காக, விஷ்ணு, நினைத்தேன் வந்தாய் போன்ற காதல் படங்களில் வெற்றி கண்டார். இதனால் அவர் ரொமான்டிக் ஹீரோவாக பெயர் பெற்றார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து, தற்போது அரசியலில் களமிறங்கிய தளபதி விஜய், தனது முதல் ஆக்ஷன் படத்திற்கு மீசை எடுக்க மறுத்துள்ளார். இயக்குநரின் வற்புறுத்தலால் இறுதியில் சமரசமாக செய்தது குறித்து அவரது நண்பர் சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே சுவாரஸ்யமான விவாதமாகியுள்ளது.
விஜய் முதன்முறையாக முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக நடித்த படம் திருமலை. ரமணா இயக்கிய இந்த படத்தில் ஜோதிகா, ரகுவரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். காதல் கலந்தது போல இருந்தாலும், இதில் ஆக்ஷன் காட்சிகள் முக்கிய இடம் பெற்றிருந்தன.
2003-ம் ஆண்டு திருமலை படத்திற்கு முன்னதாக, விஜய் பெரும்பாலும் மீசையுடன் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் ரக்கர்டு பாயாக காண வேண்டும் என்பதால் இயக்குனர் மீசையை எடுக்கச் சொன்னார்.
தில்லு முள்ளு படத்தில் ரஜினி சார் போல், விஜயும் மீசையை எடுக்க முடியாது என்று கூறிவிட்டார் என்று விஜய்யின் நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத் கூறியுள்ளார். இயக்குனர் ரமணாவின் வற்புறுத்தலால் கடைசியாக மீசையை எடுக்க ஒப்புக்கொண்ட விஜய், பிறகு அந்த லுக் பிடித்து போய் விட்டதாக கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட படங்களிலும் அதே தோற்றத்தில் நடித்தார். இந்த தகவல் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது.