Yogibabu : தனக்கான ஸ்டைலில் காமெடி செய்து சில படங்களிலேயே தமிழ்நாடு முழுக்க பேமஸ் ஆனவர் யோகி பாபு.
2009-இல் யோகி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் யோகி பாபு. அதன்பின் யாமிருக்க பயமேன் என்ற திரைப்படத்தில் ” பன்னி மூஞ்சி வாயா” என்ற டயலாக் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
அந்தப் படத்தை தொடர்ந்து தான் 2018 கோலமாவு கோகிலா படத்தில் களம் இறங்கினார். ஆனால் நயன்தாராவிற்கு இணையாக இவர் நடிக்கிறாரா என்று கேலி, கிண்டலால் சினிமா வட்டாரத்த்தை ஆச்சரியப்பட வைத்தார். யோகி பாபு உடன் நடிக்க இயக்குனர் நெல்சன் நயன்தாராவை அணுகிய போது சிறிதும் தயக்கமில்லாமல் ஒப்புக் கொண்டார்.
படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 8 கோடி தான் ஆனால் திரையில் வெளியாகி வேற லெவலில், எதிர்பாராமல் 73 கோடி வசூல் செய்தது. அதுவும் யோகி பாபுவின் காமெடிக்கு அதிக ஃபேன்ஸ் கூடி விட்டனர்.
யோகி பாபுவின் பேட்டி..
“கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா என் முகத்தில் கால் வைப்பது போல் ஒரு சீன் வரும். அந்த சீன் பண்ணுவதற்கு நயன்தாரா ஒத்துக்கவே இல்ல. ஆனா கடைசியில ஒத்துக்கிட்டாங்க. அவங்க காலில் இருக்க மண்ணு என் முகத்துல படக்கூடாதுன்னு ரொம்ப லைட்டா தான் கால மூஞ்சில வச்சாங்க” என்று யோகி பாபு பேசியது தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.