vishnu vishal : நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தமிழ் திரைஉலகில் வளர்ந்து வரும் நடிகர் ஆவார். இவர் வெண்ணிலா கபடி குழு மூலம் திரைக்கு அறிமுகமாகி திரையுலகில் பல கலகல படங்களில் நடித்து ரசிகர்களை பெற்றவர்.
கல கல நடிப்புதான் வருமா சீரியஸ் நடிப்பு வராதா என்று கேட்டவரை ஆச்சரியப்பட வைக்கும் படி ராட்சசன் படத்தில் நடித்து அனைவரின் வரவேற்பையும் பெற்றிருப்பார், மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்போடு நடிப்பதில் இவர் வல்லவர்.
பழைய ரூட்டை கையில் எடுக்கும் விஷ்ணு விஷால்..
இவ்வாறிருக்க இவர் தற்போது நடந்த படவிழாவில் ரசிகர்களுக்கு மகிழிச்சியளிக்கும் வகையில் ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது தற்போது நிறைய படங்கள் part1, part 2 என வெற்றிப்படங்களாக வெளிவருகின்றன.
part1 வெற்றிபெறாவிட்டாலும் part 2 வெற்றி பெற்று வசூலை அள்ளி குவிக்கிறது. அந்த பழைய ரூட்டை கையில் எடுத்து தானும் வெற்றிபெறலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் போல விஷ்ணு விஷால். அதாவது கட்டகுஸ்தி மற்றும் ராட்சசன் படத்தை part 2 எடுக்க போவதாக ஒரு அப்டேட் கொடுத்துள்ளார் விஷ்ணு விஷால்.
ராட்சசன் மற்றும் கட்டகுஸ்தி ஆகிய இரண்டு படங்களுமே ஏற்கனவே வெற்றி பெட்ரா படங்கள் மற்றும் அருமையான கதைக்களம். ஆகையால் இரண்டு படமுமே part 2 வந்தால் தரமான சம்பவ இருக்கும் என்பதில் மாற்றம் இல்லை.
ராட்சசன்-2 மற்றும் கட்டகுஸ்தி- 2 ஆகிய படங்களுகா மக்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்ப்பில் இருக்க போகிறாராகள். எந்த ரூட்டில் போனால் நாமும் காசு பார்க்கலாம் என சிந்தித்து செயல்படுகிறார் விஷ்ணு விஷால்.