Kamalhasan : நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தமிழ் சினிமாத்துறையில் வளர்ந்த நடிகர் மற்றும் மதிப்புமிக்க ஒரு மாமனிதன். இவரால் தென்னிந்திய திரையுலகத்திற்கே பெருமை என்றே கூறலாம்.
எக்கச்சக்கமான விருது, ஏகப்பட்ட வெற்றிப்படங்கள், படக்குழு ஆகியவருக்கு சொந்தமானவர். இவரை பற்றி சொல்லப்போனால் திரையுலகம் மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் நன்றாக பணியாற்ற தெரிந்த ஒரு அரசியல்வாதி.
தனிப்பட்ட முறையிலும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி, திரையுலகம் சார்ந்தும் இவர் பல பேருக்கு நிறைய நன்மைகளை செய்துருக்கிறார், அதனால் பெரும்பாலான மக்களுக்கு இவர் மிகவும் பிடித்தமான ஒருத்தர். இவரை பற்றி பெருசாக எதிர்மறையாக சொல்ல கூடிய அளவுக்கு என்றுமே இவர் நடந்து கொண்டதில்லை.
உலகமே கொண்டாடும் நாயகனை திட்டி தீர்க்கும் கே ராஜன்..
இவ்வாறிருக்க கே ராஜன் அவர்கள் கமல்ஹாசன் அவர்களை பற்றி அவ்வளவு எதிற்மறையான விஷயங்களை முன்வைத்து தற்போது அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஏன் இவ்வாறு அவர் பேசியிருக்கிறார் என்பது அவரது தனிப்பட்ட கருத்து.
கமல்ஹாசன் ஒரு முழுவதும் எதிர்மறையான ஆள். அவர் திரையுலகம் சம்பந்தமாக எதாவது பிரச்சினை வந்தால் சிலரை தூண்டிவிட கூடிய ஒரு மனிதர். மற்றவர்களை தூண்டிவிட்டு தில் குளிர காயா கூடிய ஆள். திரையுலகமே ஒன்று சேர்ந்து ஒரு பக்கம் போனால் இவர் தனக்கென என்று ஒரு பக்கம் போவார் என்றும் கூறியுள்ளார்.
அரசியல் ஆரம்பித்தார் ஒரே எலெக்க்ஷனில் முடிந்துவிட்டது. அவருக்கும் பாவம் 60 வயதாகிவிட்டது. அவரது குணநலன்களை மற்ற முடியாது. மக்களிடையே பெரிதாக செல்வாக்கு இல்லை எனவும் கூறியுள்ளார், ஆனால் மிகசிறந்த நடிகன் என்பதை மட்டும் யாராலும் மற்ற முடியாது எனவும் கூறியுள்ளார் கே ராஜன்.
உலகநாயகன் என அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்கள் அனைவர்க்கும் பிடித்த நல்ல நாயகன், ஆனால் கமல்ஹாசன் பற்றி கே ராஜன் அவர்கள் பேசியது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? எதற்காக இவ்வளவு ஆக்ரோஷம் ராஜன் சார்.