Nayanthara : லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ் சினிமாவில் வலம் வரும் ஒரு முன்னணி நடிகை. இவர் நிறைய படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தற்போது உள்ள முன்னணி நடிகர் அணைத்து பேருடனும் நடித்து புகழ்பெற்றவர். பாலிவுட் , கோலிவுட் என அனைத்திலும் கலக்கி கொண்டிருக்கிறார். பேர்போன நடிகை என்றில்லாமல் இவர் 2 குழந்தைக்கும் தாயாகவும் இருந்து வருகிறார்.
இவர் விக்னேஷ் சிவன் என்ற இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மற்றும் இவரது திருமண வீடீயோவை படமாக வெளியிட்டார். இதன் மூலம் நிறைய பிரச்சினைகளையும் எதிர்கொண்டார்.
விடாமல் துரத்தும் சந்திரமுகி, பாயும் வழக்கு..
விடாமல் துரத்தும் சந்திரமுகி என்பது போல,தற்போது நயன்தாரா அவர்கள் ஆவணப்படத்தில் “சந்திரமுகி” பட காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்த தடை கோரி பதிப்புரிமை பெற்றுள்ளது ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு பதிந்துள்ளது.
இத வழக்கு தொடர்பாக ஆவண பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் netflix நிறுவனம் ஆகியவைகள் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த ஆவணப்படம் மூலமாக இன்னும் எத்தனை பிரச்சினைதான் சமாளிக்க போகிறார் என தெரியவில்லை. திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் லேடி சூப்பர் ஸ்டார்தான் போல நயன்தாரா.