Nayanthara : நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். ஒரு நடிகை தனித்து நின்று படம் நடித்தாலும், அது வெற்றி பெரும் என்ற நிலைமையை உருவாக்கியவர். இவரை பின்பற்றி மற்ற நடிகைகள் தனியே தனித்து நின்று நடிக்கிறார்கள்.
தென்னிந்திய அளவில் படம் நடித்து வெற்றிகண்டவர். மலையாளம், தமிழ்,ஹிந்தி, தெலுங்கு என இத்தனை மொழிகளிலும் நடித்து கோடி கணக்கில் வசூலை பெற்று தரமான படங்களை கொடுத்துள்ளார்.
தனிப்பட்ட முறையில் அவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், அது எதுமே நயன்தாரா அவர்களின் சினிமா வாழ்க்கையை பாதிப்பதில்லை. அவர் இரண்டையும் நன்றாக கையாள தெரிந்தவர். இவரை பற்ற வதந்திகள் பல எழுந்தாலும் இவர் மேலும் மேலும் உச்சத்திக்கே சென்று கொண்டிருக்கிறார்.
இவர் தற்போது தெலுங்கு, மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழி படங்களை கைவசம் வைத்துள்ளார். பான் இந்திய நடிகையாக no.1 இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார். குறிப்பிட்ட சில வருடங்களாகவே முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
குந்தவை-லாம் No.1 நயன்தாரா கிட்ட வரவே முடியாது போல..
குந்தவை (திரிஷா) லாம் ஒண்ணுமே இல்ல என்கிற அளவுக்கு திரையுலகத்தில் யாரும் தொட முடியாத இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார் நம் லேடி சூப்பர்ஸ்டார். ஆயிரம்தான் திரிஷா முன்னணி நடிகை என்று சொன்னாலும் நயன்தாராவை அடித்துக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.
நடிப்புலும் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அஞ்சா நெஞ்சம் கொண்டவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் பான் இந்திய அளவில் ஒரு நடிகை வலம் வருவதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல.