Dhanush : தனுஷ் இப்போது சினிமாவில் செம பிசியாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான குபேரா படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அவரை இயக்கி, நடிக்கும் இட்லிகடை படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த சூழலில் தனுஷின் லைனில் இருக்கும் இயக்குனர்கள் யார் என்பதை பார்க்கலாம். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் படத்தை இயக்குகிறார். அடுத்ததாக இளையராஜாவின் பயோபிக்கில் தனுஷ் நடிக்க உள்ள நிலையில் அந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
இதைத் தொடர்ந்து விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் உடன் கூட்டணி போட இருக்கிறார். மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் இருவரும் மாமன்னன் படத்தில் கூட்டணி போட்ட நிலையில் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருக்கின்றனர்.
தனுஷ் கைவசம் இருக்கும் 7 இயக்குனர்கள்
விக்ரம் பிரபுவின் டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழரசன் மற்றும் ஜனநாயகன் பட இயக்குனர் ஹெச் வினோத் ஆகிய இயக்குனர்களும் தனுஷ் லைன் அப்பில் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் தனுஷின் ஆஸ்தான இயக்குனராக இருந்து வருபவர் தான் வெற்றிமாறன்.
பொல்லாதவன் படத்தில் மூலம் வெற்றிமாறனுக்கு தனுஷ் வாய்ப்பு கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களும் இவர்களது கூட்டணியில் அமைந்தது. வடசென்னை, அசுரன் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து மீண்டும் வடசென்னை 2 படத்தில் இவர்கள் இணை இருக்கிறார்கள்.
வெற்றிமாறன் தற்போது சிம்புவை வைத்து ராஜன் வகையறா பின்னணியை கொண்ட ஒரு படத்தை எடுத்து வருகிறார். அந்தப் படத்தை முடித்த கையோடு சிம்புவுடன் இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.