நிதேஷ் தவாரியின் இயக்கத்தில் உருவாகும் ‘ராமாயணா’ திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றில் மிகப் பெரிய படைப்பாக உருவாகி வருகிறது. புதிய கதாபாத்திரங்கள், பிரம்மாண்ட VFX, ஹாலிவுட் தொழில்நுட்ப குழு, இந்திய நட்சத்திரங்கள் – இவை அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு கோடிக்கணக்கில் உருவாகும் சினிமாவாக Ramayana உருவாகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ராமராக நடிக்கிறார். ஒரு பாகத்திற்கு ₹75 கோடி, இரு பாகங்களுக்கும் சேர்த்து ₹150 கோடி சம்பளம் வாங்குகிறார். இது அவருடைய திரைப்பட வாழ்க்கையின் மிகப்பெரிய சம்பளமாகும்.
தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் விருப்ப நடிகை சாய் பல்லவி, சீதையாக நடிக்கிறார். ஒரு பாகத்திற்கு ₹6 கோடி என இரண்டு பாகங்களுக்குத் ₹12 கோடி சம்பளம் பெறுகிறார். இது அவருக்கான சாதனையாகக் கருதப்படுகிறது.
KGF புகழ் யாஷ், ராவணனாக நடிக்கிறார். ஒரு பாகத்திற்கு ₹50 கோடி என மொத்தம் ₹100 கோடி சம்பளமாகும். இதற்க்கு மேலாக, அவர் தனது நிறுவனம் Monster Mind Creations வாயிலாக co-producer ஆகவும் உள்ளார்.
சன்னி டியோல், ஹனுமான் வேடத்தில் நடிக்கிறார். ஒரு பாகத்திற்கு ₹20 கோடி, இரண்டு பாகங்களுக்கு ₹40 கோடி சம்பளமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாலிவுட் தரத்தில் தொழில்நுட்ப குழு
இந்த படத்தில் Avengers, Mad Max போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய டெரி நோட்டரி, காய் நொரிஸ் போன்றவர்கள் சண்டை காட்சிகளை அமைக்கின்றனர். Dune 2, Tomorrowland பட அனுபவமுள்ள தயாரிப்பாளர்கள் ரவி பன்சால், ராம்சி அவெரி VFX மற்றும் ஆர்ட் டைரெக்ஷனை கவனிக்கின்றனர்.
சில தகவல்களின் படி, Ramayana படம் ரூ.835 கோடி செலவில் உருவாகிறது. மற்றொரு அறிக்கையின் படி, இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம் ₹1600 கோடி செலவில் உருவாகவுள்ளது – முதல் பாகம் ₹900 கோடி, இரண்டாம் பாகம் ₹700 கோடி என கூறப்படுகிறது.
முதல் பாகம் 2026 தீபாவளிக்கு, இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ராமாயணா திரைப்படம், நட்சத்திரங்களின் சம்பள விவரங்களாலும், பிரம்மாண்ட தயாரிப்பாலும் இந்திய சினிமாவின் வரலாற்றில் தனி இடத்தைப் பிடிக்க தயாராகிறது.