எதிர்நீச்சலில் ராஜதந்திரிகாக குணசேகரன் வலம் வந்து கொண்டிருக்கிறார். திருந்தியது போல் நாடகமாடி ஓடிப்போன பையனை வீட்டுக்கு வரவைத்து நொங்கை பிதுக்கி விட்டார். அவருடன் சேர்ந்து வந்த காதலி பார்கவி மற்றும் அவரது அப்பாவை வெளுத்து விட்டனர்.
மகனை வீட்டுக்கு வர வைப்பதற்காக நல்லவன் நாடகமாடி. திட்டம் நிறைவேறியதும் தன்னுடைய சுய ரூபத்தை காட்டிவிட்டார் குணசேகரன். ஜீவானந்தம், பார்கவி அவரது தந்தை, தர்ஷன் ,ஜீவானந்தம் என அனைவரும் வீட்டுக்கு வந்தவுடன் அடிதடி நடக்கிறது.
ஏற்கனவே அங்கே இருந்த அறிவுக்கரசி அவரது அடியார்கள் குணசேகரன் தம்பிகள் என அனைவரும் சேர்ந்து எல்லோரையும் தாக்குகிறார்கள். ஒரு கட்டத்தில் வண்டியில் இருந்து கட்டையை எடுத்த ஜீவானந்தம் அனைவரையும் தடுத்து நிறுத்தி பதில் தாக்குதல் நடத்துகிறார்.
அடிபட்ட பார்கவியையும் அவரது தந்தையையும் தன்னுடைய காரில் மருத்துவமனைக்காக அழைத்துச் செல்கிறார். ஆனால் பார்கவியின் தந்தை பரலோகம் சென்றுவிட்டார். இதனை கேள்விப்பட்ட ஈஸ்வரி முதல் ஜனனி வரை அழுது புலம்புகிறார்கள். என்னால்தான் இந்த நிலைமை என ஈஸ்வரி தலையில் அடித்துக் கொள்கிறார்.
ஆனால் இவர்கள் நினைத்தால் குணசேகரனின் அவரது தம்பிகளையும் சிறைக்கு அனுப்பலாம். இந்த கொலை கேஸ் அவர்களுக்கு போதாதா? இதையெல்லாம் ஜனனி ஆவேசமாக பேசுகிறார். ஆனால் ஈஸ்வரியும் டம்மி பீசாக என்னால்தான் அவர் இறந்து விட்டார் என புலம்பி தள்ளுகிறார். கொஞ்சம் கூட லாஜிக், யோசனை எதுவும் தெரியாதா என இல்லத்தரசிகளை குமுற வைத்து விட்டார் ஜீவானந்தம்