Trisha : திரிஷா தரமான ரீ என்ட்ரி கொடுத்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சூழலில் தற்போது அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கமல் மற்றும் சிம்பு இருவருக்கும் ஜோடியாக தக் லைஃப் படத்தில் இந்திராணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனால் மணிரத்னம் த்ரிஷாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் கொடுத்து விட்டாரே என ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். இந்த சூழலில் இப்போது 22 வயது வித்தியாசம் உள்ள ஹீரோவுடன் ஜோடி போட இருக்கிறார் திரிஷா. தக் லைஃப் தோல்வியை அடுத்து திரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் ஒரு கதையை கூறியிருக்கிறார்.
அந்த கதை பிடித்த உடனே த்ரிஷா ஓகே சொல்லிவிட்டாராம். இந்த படத்தில் கதாநாயகனாக வெங்கடேஷ் நடிக்கிறார். வெங்கடேஷுக்கு இப்போது 64 வயதாகும் நிலையில் த்ரிஷாவுக்கு 42 வயதாகிறது. மேலும் இவர்கள் இதற்கு முன்னதாக நமோ வெங்கடேசா, ஆடவாரி மட்டாலுக்கு அர்தாலே வேறுலே மற்றும் வர்ஷம் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர்.
22 வயது வித்தியாசம் உள்ள ஹீரோவுடன் ஜோடி போடும் திரிஷா
இந்த படம் மூலம் நான்காவது முறையாக கூட்டணி போட இருக்கின்றனர். மேலும் திரிஷா இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், நிதி அகர்வால் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
இப்படத்தை சித்தாரா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. மேலும் 2025 ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.
இப்படம் குடும்ப சார்ந்த ஒரு பொழுதுபோக்கு படமாக அமைய இருக்கிறது. மேலும் த்ரிஷா இப்போது ஆஜே பாலாஜி டைரக்ஷனில் சூர்யா நடிப்பில் உருவாகும் கருப்பு படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் தெலுங்கு பக்கம் அடி எடுத்து வைக்கிறார்.