Singapenne: சன் டிவி ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி அவள் கர்ப்பமாக இருப்பதே அன்பு விடம் சொல்லி விட வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.
ஆனந்தி எந்த நிலைமையில் இருந்தாலும் அன்பு அவளை ஏற்றுக் கொள்வான் என்பது தற்போது அவளுக்கே தெரிந்து விட்டது. இந்த சூழ்நிலையில் தான் கோகிலா திருமணத்தின்போது ஆனந்தி கழுத்தில் தாலி கட்ட அன்பு முடிவு செய்து இருக்கிறான்.
அன்புக்கு கிடைக்கும் ஆதாரம்
கோகிலாவின் திருமண வேலைகள் மண்டபத்தில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் தான் ஆனந்தி அழகன் என்று எழுதப்பட்டிருக்கும் கர்சிப்பை எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அந்த நேரத்தில் அன்பு வந்து மாப்பிள்ளையின் துணைகள் இருக்கும் பையை கேட்கிறான். உடனே சௌந்தர்யா அந்த கைகுட்டையை பையை திறந்த உடன் அன்பு கண்ணில் படும்படி வைத்து விடுகிறார். எப்படியும் அன்பு அந்தப் பையை திறந்ததுமே கைகுட்டையை எடுத்து பார்க்க வாய்ப்புண்டு.
இதனால் ஆனந்தி தன்னை இன்னும் அதே மாதிரி நேசிக்கிறார் என்ற நம்பிக்கை அன்புக்கு கிடைத்துவிடும். இதன் பிறகு அன்பு தைரியமாக ஆனந்தியை திருமணம் செய்து கொள்ள களம் இறங்கி விடுவான்.
அது மட்டும் இல்லாமல் இவ்வளவு காதலை வைத்துவிட்டு எதனால் ஆனந்தி தன்னை வெறுப்பது போல் நடிக்கிறாள் என்பதை கண்டுபிடிக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.