Aamir Khan: விஷ்ணு விஷால் ஹீரோவாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். தற்போது அவருடைய தயாரிப்பில் ஓஹோ எந்தன் பேபி உருவாகி இருக்கிறது. அவருடைய தம்பி ருத்ரா நடித்திருக்கும் படம் வரும் 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் படத்தை பார்த்த அமீர்கான் மனம் திறந்து பாராட்டி இருக்கிறார். இது படத்திற்கு ஒரு நல்ல விளம்பரமாக உள்ளது.
ஆனால் ஏன் அவர் இப்படத்திற்கு ப்ரமோஷன் செய்யணும். விஷ்ணு விஷாலுக்கும் அவருக்கும் அப்படி என்ன உறவு என்ற கேள்வி இப்போது அனைவருக்கும் இருக்கிறது.
அமீர்கான் பாராட்டிய ஓஹோ எந்தன் பேபி
ஏனென்றால் சமீபத்தில் விஷ்ணு விஷாலின் மகளுக்கு இவர்தான் பெயர் சூட்டி இருந்தார். அந்த போட்டோக்கள் கூட வைரலானது. அதை தொடர்ந்து தற்போது ஓஹோ எந்தன் பேபி படத்தை அமீர்கான் பார்த்த ப்ரோமோ கூட வெளியாகி இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் இவர் விஷ்ணு விஷால் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் என்பதுதான். முன்னதாக சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டபோது கூட அமீர்கான் விஷ்ணு விஷால் வீட்டில் தான் இருந்தார்.
அவருடைய அம்மா உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்காகவே அமீர்கான் சென்னையில் தங்கும் படி இருந்தது. அப்போது வெள்ளத்தில் அவர் சிக்கிய போது அஜித் தான் அவர்களுக்கு உதவி செய்தார்.
அப்படித்தான் அவர்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பு உருவாகி இருக்கிறது. தற்போது இருவரும் குடும்ப நண்பர்களாகவும் மாறி இருக்கின்றனர். அந்த நட்பின் அடிப்படையில் அமீர்கான் விஷ்ணு விஷால் கூப்பிட்டதும் உடனே வந்திருக்கிறார்.