Vadivelu : கடந்த மாதம் வெளியான சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. குபேரா, 3BHK, பறந்து போ படங்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருந்தனர். அந்த வகையில் ஜூலை மாதம் வெளியாகும் பெரிய படங்களை பார்க்கலாம்.
மாமன்னன் படத்திற்கு பிறகு பகத் பாசில் மற்றும் வடிவேலு இருவரும் கூட்டணி போட்டிருக்கும் படம் தான் மாரீசன். இந்த படம் ஜூலை 25 வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். சுதீஷ் சங்கர் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
மாரீசன் படத்திற்கு போட்டியாக தலைவன் தலைவி படம் வெளியாக இருக்கிறது. விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவரும் ஜோடி போட்டு நடித்து இருக்கின்றனர். இவர்களது கெமிஸ்ட்ரி திரையில் பார்க்கும் போது நன்றாக இருக்கிறது. ஆகையால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஜூலை மாதம் வெளியாகும் 5 பெரிய படங்கள்
மேலும் இதே நாளில் மும்முனை போட்டியாக கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சர்தார் 2 படமும் வெளியாகிறது. முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இந்த படங்கள் எல்லாமே ஜூலை 25ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.
பவன் கல்யாண், பாபி தியோல் மற்றும் நிதி அகர்வால் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் ஹரிஹர வீர மல்லு படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் ஜூலை 24ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. மேலும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது கிங்டம் படம்.
இது ஜூலை 31ம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. ஆகையால் இந்த மாதம் முழுக்க ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்வதற்காக பெரிய படங்கள் வெளியாகிறது. இதில் எந்தெந்த படங்கள் வெற்றி வாகை சூடுகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.