kamalhasan : நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பன்முகத்தன்மை கொண்ட நடிகர் என்பது அனைவரும் தெரிந்ததே. நடனம், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நன்றாக வசம் எழுத ஓடிய ஒரு நபர் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் சிறந்த நடிகராகத்தான் நாம் அவரை பார்த்துருப்போம். பார்த்துக்கொண்டும் இருக்கிறோம். அதை தாண்டி அவரை நமக்கு நல்ல நடனமாட கூடியவராகவும் தெரியும் அவ்வளவுதான்.
விஜய் டிவியில் biggboss தொகுத்து வழங்கியதன் மூலம் கமல்ஹாசன் அவர்களுக்கு ரசிகர் பட்டாளம் இன்னும் அதிகரித்தது என்றே கூறலாம். அவரது தமிழ் உச்சரிப்பு மற்றும் இரட்டை அர்த்தம் உள்ள வார்த்தை என அனைத்திலும் கை தேர்ந்த ஒரு கலைஞன் என்றே கூறலாம்.
நாம் இவ்வாறு இவரை பலவிதத்தில் ரசித்து கொண்டிருக்க திரையுலகம் சம்மந்தப்பட்டவர்கள் இவரை என்னன்ன கோணத்தில் எல்லாம் ரசிப்பார்கள் என்ற கண்ணோட்டம் ஒன்று இருக்கிறது.
ஆனால் இயக்குனர் சரண் அவர்கள் கமல்ஹாசனை,அனைவருக்கும் நடிகர் கமல்ஹாசனை தான் தெரியும் அனால் அவர் ஒரு நல்ல இயக்குனர் என்பது நான் அறிந்தது. அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே பார்த்தால் அவரது திறமை நமக்கு தெரியும். வசனம் எழுதும் போதும் சரி, அந்த அக்கதாபாத்திரத்தை நடித்து காமிக்கும் போதும் அவ்வளவு அருமையாக இயக்க கூடியவர்.
K பாலச்சந்தர் இல்லன்னா, கமல் ஒரு நடிகன் இல்ல..
கமல்ஹாசனுக்குமே இயக்குனர் ஆகவேண்டும் என்றுதான் ஆசை. இயக்குநர் எப்போ வேண்டுமானாலும் ஆகிக்கலாம் நீ முதலில் நடிகனாகு என கே பாலச்சந்தர் அவர்கள் கூறினார், அதை ஏற்று அவர் நடிக்க ஆரம்பித்தார். அதனால்தான் இன்று உலக நாயகனாக உருவெடுத்து இருக்கிறார் கமல்ஹாசன், எனக்கு தெரிந்து இந்தியாவிலேயே TOP 5 இயக்குனர் லிஸ்ட்ல கமல்ஹாசன் இடம்பிடிப்பார் எனவும் தற்போது அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
இயக்குனர் சரண் அவர்கள் கே பாலச்சந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராக பனி புரிந்தவர். ஜெமினி ப்ரொடெக்ஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான இவர் கமல்ஹாசனை புகழ்ந்த்திருப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. தன்னை சார்ந்த துறையில் இருக்கும் ஒருவரை புகழ்வது என்பது இந்த காலத்தில் பெரிதன்று.