Mamitha Baiju: காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும். இது நடிகைகள் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது. மார்க்கெட் இருக்கும்போதே படங்களை கமிட் செய்து கை நிறைய லாபம் பார்த்து விடுகின்றனர் இளம் நடிகைகள்.
அதில் இப்போது ட்ரெண்டிங்கில் பூஜா ஹெக்டே, கையாடு லோகர், மமிதா பைஜூ ஆகியோர் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்குள் தான் போட்டி கடுமையாக இருக்கிறது.
அதில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்று வருகிறார் மமிதா. பிரேமலு மூலம் தமிழ் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்த இவர் தற்போது ஆறு படங்களை கைவசம் வைத்துள்ளார்.
கைவசம் இத்தனை படங்களா.!
அதில் இவர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து இரண்டு வானம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து டியூட் படத்திலும் நடித்து வருகிறார்.
அதையெல்லாம் தாண்டி சூர்யாவுக்கு ஜோடியாக அவருடைய 46வது படத்திலும் இவர்தான் ஹீரோயின். ஏற்கனவே வணங்கான் படத்தில் இவர்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில பிரச்சனைகளின் காரணமாக விலகிவிட்டார்.
இருந்தாலும் மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து விட்டது. அதை தொடர்ந்து தற்போது தனுசுக்கும் இவர் ஜோடியாகி இருக்கிறார். போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் பீரியட் கதையில் அம்மணி தான் ஹீரோயின்.
நிச்சயம் தனுசுடன் இவருடைய ஜோடி பொருத்தம் வரவேற்பு பெரும் என ரசிகர்கள் இப்போதே அலப்பறையை தொடங்கிவிட்டனர். அதேபோல் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
இது இல்லாமல் மலையாளத்திலும் ஒரு படம் இவர் கைவசம் உள்ளது. இப்படியாக அவர் தற்போது பிஸியான நாயகியாக இருக்கிறார்.