Serial : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “அய்யனார் துணை” சீரியல், சாதாரண பெண்களின் வாழ்க்கை போராட்டங்களை உணர்ச்சிபூர்வமாக திரையில் காண்பித்து பார்க்கும் இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை அடிக்கிறது.
நிலா என்ற கதாபாத்திரம் தான் இப்போது சூடு பிடிக்கிறது. நிலா எதற்கும் பயப்படாமல் உண்மைக்கு எதிராக குரல் கொடுத்து நேருக்கு நேர் பிரச்சினையை எதிர்கொள்கிறாள். கார்த்திகாவிற்கு நடக்கும் நிலையை யோசித்து அவளால் எதுவும் பேச முடியவில்லை.
போலீஸ் விசாரணை..
கார்த்திகாவிடம் போலீஸ் அதிகாரிகள் கடுமையான விசாரணைகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கார்த்திகாவின் முகத்தில் ஏதோ குழப்பம் லேசாக தென்படுகிறது.
கார்த்திகா உண்மை சொல்கிறாளா? இல்லை பொய் சொல்கிறாளா? என்ற கேள்வி இந்த காட்சியை பார்க்கும் ரசிகர்களின் மனதில் கேள்வியை எழுப்புகிறது.
சோழன் சேரன் மோதல் :
சீரியலின் இன்னொரு பக்கம் பார்த்தால் சோழன் நிலாவை விமர்சிக்கின்றான். ஆனால் அதற்கு எதிராக சேரன் நிலாவை நம்பி அவளுக்கு பக்கபலமாக இருக்கின்றான். “நீ உண்மையைப் பேசும் போது, அது யாருக்கும் பிடிக்காது. ஆனால் அதற்காக உண்மையை நீ பேசாம இருக்க முடியுமா?” என்ற இந்த உரையாடலும் நிகழ்கிறது.
கார்த்திகாவின் நிலை..
குடும்பத்தால் ஒட்டுமொத்தமாக தவிர்க்கப்படும் நிலையில் இருக்கும் கார்த்திகா காவல்துறையின் அழுத்தத்தையும் தாங்க முடியாமல் கதி கலங்கி நிற்கிறார். “நீ என்னை நம்புகிறாயா என்று கார்த்திகா கண்ணீருடன் கேட்கும் இந்த காட்சி ” இந்த காட்சி தான் இந்த சீரியலில் ஹைலைட் ஆக இருக்கிறது. இப்படி அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது அய்யனார் துணை சீரியல்