Tourist Family : இந்த வருடம் வெளியான படங்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்த சில குழந்தை நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். அவ்வாறு மக்கள் மனதில் இடம் பிடித்த ஐந்து ஃபேவரட் குழந்தை நட்சத்திரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோரின் இளைய மகனாக முல்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கமலேஷ் ஜகன். எல்லா வீட்டிலும் இதே போன்ற கலகலப்பு ஏற்படுத்த ஒரு குட்டி செல்லம் வேண்டும் என ரசிக்க வைத்திருந்தார் கமலேஷ்.
மாமன் படத்தில் சூரியின் அக்கா மகனாக லட்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரகீத் சிவன். இந்த படமே அவரை சுற்றிய கதைகளம் தான். பல பிரச்சனைகள் இடையே அவரது குறும்புதனம் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. எமோஷன் காட்சிகளிலும் கண்கலங்க வைத்து விடுகிறார்.
2025-ல் கலக்கிய ஐந்து குழந்தை நட்சத்திரங்கள்
கிரைம் திரில்லர் படமாக வெளியாகி ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்தியது லெவன் படம். இதில் குறைந்த நேரத்தில் வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர் பெஞ்சமின் மற்றும் பிரான்சிஸ். தன்னுடைய நடிப்பு திறமையால் பாராட்டுகளையும் பெற்று இருக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் ராம் இயக்கத்தில் சிவா நடிப்பில் வெளியானது பறந்து போ படம். இதில் சிவாவின் குழந்தையாக அன்பு கதாபாத்திரத்தில் மிதுன் ரியான் நடித்திருக்கிறார். ஒரு தந்தையுடன் உணர்ச்சி பூர்வமாக பயணத்தை மேற்கொள்ளும் சிறுவனின் காட்சிகள் ரசிகர்களை வியக்க வைத்தது.
தொடர்ந்து சின்ன குழந்தைகளின் வரவு தமிழ் சினிமாவில் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இவர்களுக்கு அடுத்தடுத்த படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.