Kalanithi Maran : முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான் மாறன் சகோதரர்கள். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். சன் டிவி நெட்வொர்க் தலைவர் மற்றும் மீடியாவில் முதன்மையாக விளங்கி வருகிறார் கலாநிதி மாறன்.
இந்த சூழலில் சன் குழுமத்தின் பங்குகள் அடிப்படையில் மாறன் சகோதரர்கள் இடையே பிளவு ஏற்பட்டது. இந்த சொத்து பிரச்சனை காரணமாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இது இணையத்தில் மிகப்பெரிய பேசும் பொருளாக மாறியது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த விவாகரத்தில் இறங்கி சுமூகமாக முடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது கலாநிதி, தயாநிதி மற்றும் அன்புகரசி ஆகியோர் மூவரையும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். மேலும் மாறன் சகோதரர்கள் இடம் ஒற்றுமையாகவும், இணக்கமாகவும் செல்ல வேண்டும் என்று அறிவுரையும் கூறியிருக்கிறார்.
சமரசத்தில் மாறன் சகோதரர்கள்
இதன் அடிப்படையில் தயாநிதி மாறனுக்கு கூடுதல் பங்குகள் தர கலாநிதி மாறன் ஒற்றுக் கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகையால் இந்தப் பிரச்சனை பூதாகரமாக எடுக்காமல் சமரசமாகி இருக்கிறது.
மேலும் மாறன் சகோதரர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டால் இது சன் குழுமம் மற்றும் பங்கு விநியோகம் போன்ற வணிக நலன்களை தொடர்புடையதாக இருக்கும். மேலும் இவர்களது குடும்பப் பிரச்சனை அரசியலிலும் மாறுபட்ட கருத்துக்களை உண்டாக்கும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இப்போது மாறன் சகோதரர்கள் சமரசமாக செல்ல முடிவெடுத்து இருக்கின்றனர். மேலும் கலாநிதி மாறன் இப்போது தனது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினியின் கூலி, ஜெயிலர் 2 மற்றும் அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் உருவாகும் படத்தையும் தயாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.