சினிமா வளர்ச்சியோடு தொழில்நுட்பம் மட்டுமல்ல, நடிகர் நடிகைகளின் நடத்தைப் பழக்கங்களிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொடக்க கால சினிமாவும் இன்றைய சினிமாவும் வாழ்க்கை நெறிகளில் பெரிதும் மாறியுள்ளது.
அந்த கால சினிமா ஒரு குடும்பமா தான் இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் செட்டுக்குள் படங்களை முடித்தார்கள். பாரதிராஜா சினிமாவை கிராமத்திற்கு எடுத்துச் சென்றார்.
பிறகு வந்த இயக்குநர்களும் வெளிப்புற படப்பிடிப்பை மேற்கொண்டு அந்த கலாச்சாரத்தை வளர்த்தனர். அதேசமயம், கமல்ஹாசன் டிஜிட்டல் கேமரா கொண்டு புதிய புரட்சியை ஏற்படுத்தினார்.
இப்போதெல்லாம் நடிகர்கள் கேரவன் இருந்தா தான் நடிக்க வருகிறார்கள். கேரவனில் இருப்பது தான் அதிகம், படப்பிடிப்பில் இருப்பது குறைவு என தயாரிப்பாளர்கள் வேதனையுடன் பேசுகின்றனர். குழுவாக இருந்த சினிமா தற்போது தனிமைப்படுத்தல் போல் உள்ளது.
தயாரிப்பாளர் வேதனை
முன்னாள் மாணிட்டரே இல்லாத காலம் இன்று ஒவ்வொருவரும் தனி மாணிட்டர் கேட்கிறார்கள் என்கிறார். நயன்தாரா தனி மானிட்டர் கேட்டு இயக்குநர்களை அவமதிக்கிறார் என குற்றம் சாட்டிய அவர், சினிமா இப்போது சலுகைகளால் குட்டிச்சுவராகி விட்டது என வேதனை தெரிவித்துள்ளார்.
அதனால் தான் ஏ.வி.எம்., விஜயா வாஹினி போன்ற நிறுவனங்கள் படம் எடுக்காமல் விலகி விட்டது என்று ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.