Vijay : நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இன்று வரையில் கிட்டத்தட்ட ஆளுங்கட்சி எதிர்க்கட்சி தவிர மற்றவர்கள் அனைத்துமே விஜய்க்கு ஆதரவாக தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது அரசியலுக்கு அடுத்த எம் ஜி ஆர் விஜய். எம்ஜிஆர் அரசியல் சூட்சமங்களை பின்பற்றுகிறார் விஜய் என்கிற பேச்சு பரவலாக இருந்து வருகிறது.
பொதுவாக எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு திட்டம் என்பது அவசியம் என்பது நடிகர் விஜய் அவர்களின் விஷயத்தில் தெளிவாக நமக்கு புரிந்த ஒன்று. எதை எடுத்தாலும் நிதானத்தோடும், பொறுமையாகவும் அரசியல் களத்தில் நின்று தன் கட்சியை வலிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் விஜய்.
2026 தேர்தலை நோக்கி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும் விஜய் அவர்களுக்கு, அவரின் ஆதரவாளர்கள் அனைத்து பேருமே ஒவ்வொரு அட்வைஸ்ஸாக கொடுத்து வருகிறார்கள் என்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
அந்த வகையில் நடிகை ரோஜா அவர்கள் முன்னாளில் விஜய் அவர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும். தற்போது ஆந்திரா மாநிலத்தில் நல்ல அரசியல்வாதியாகவும் இருந்து மக்களுக்கு பணியாற்றி வருகிறார். இவர் தற்போது அளித்திருந்த நேர்காணல் ஒன்றில் விஜயின் அரசியல் பற்றி சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
பவன் கல்யாணுக்கு பைத்தியம்..
அதாவது பவன் கல்யாண் அவர்கள் அரசியலில் இருந்து கொண்டு அதை ஒரு பொருட்படுத்தாமல், சினிமாவில் படம் எடுப்பதில் பிஸியாக இருந்து வருகிறார். பவன் கல்யாண் பைத்தியம் போல அரசியலை டைம் பாஸ் ஆக செய்து வருகிறார். இதுபோல நீங்களும் இருக்காதீர்கள் என்று விஜய் அவர்களுக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ரோஜா.
அதுமட்டுமல்லாமல் அரசியலில் எம்ஜிஆர் மாதிரி இருங்க, அதாவது அரசியலுக்கு வந்ததற்கு பின்பு முழுமையாக எம்ஜிஆர், என்டிஆர், ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் முற்றிலும் படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டனர். அவர்களைப் போல நடிகர் விஜய் இருக்க வேண்டும்.
மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நம்பும் மக்களுக்காக, எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சண்டை போட வேண்டும், என்றும் நடிகை ரோஜா அவர்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.