Nayanthara: நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனை பிரிவதாக பிரபல தெலுங்கு மீடியாவில் செய்திகள் வெளியானது. அதே நேரத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தங்களுடைய உயிர் மற்றும் உலகத்துடன் பழனி கோவிலில் தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள்.
அட என்னதான்பா நடக்குது இவங்க வாழ்க்கையில என்ற சந்தேகம் எல்லோருக்கும் வந்தது. இதற்கு காரணம் அந்த டாக்குமென்டரி வீடியோவுக்கு பிறகு விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து நயன்தாரா குறித்த எந்த ஒரு புகைப்படங்களும் இன்ஸ்டாகிராமில் வெளியாகாமல் இருந்ததுதான்.
நெருப்பில்லாமல் புகையுமா பாஸ்?
கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தன்னுடைய படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இதுதான் என்னுடைய உலகம் என பதிவிட்டிருந்தார். அது மட்டும் இல்லாமல் கடந்த வாரத்தில் நயன்தாரா இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரி வைத்து அதை உடனே அழித்துவிட்டதாக ஒரு புகைப்படம் பரவியது.
அதில் முட்டாள்தனமாக இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொண்டால் நாம் தான் கஷ்டப்பட வேண்டியது வரும். எதற்காக என்னை இப்படி கஷ்டப்படுத்துகிறீர்கள் என்ற ஆங்கில வார்த்தை வசனம் இருந்தது.

ஒரு பக்கம் இந்த புகைப்படம் காட்டுத் தீயாய் பரவ இன்னொரு பக்கம் இது முற்றிலும் பொய், நயன்தாரா இப்படி ஒரு ஸ்டோரியை வைக்கவே இல்லை என சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தொடர்ந்து இந்த தம்பதி விவாகரத்து செய்வதாக செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.
என்னதான் இவர்கள் வாழ்க்கையில் ஏகப்பட்ட நெகட்டிவிட்டிகள் இருந்தாலும் இந்த தம்பதி காதல் வாழ்க்கை எல்லோருக்குமே பேவரிட் ஆன ஒன்று. அப்படி இருக்கும் பட்சத்தில் நெருப்பில்லாமல் புகையாது என்று சொல்வார்கள்.
அப்படித்தான் இந்த விவாகரத்து விஷயமும் சுழன்று கொண்டிருக்கிறது. இதற்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் யாராவது ஒருவர் முடிவு கட்டுகிறார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.