அடிக்கடி சளி இருமலால் பாதிக்கப்படுகிறீர்களா? தேங்காயை பயன்படுத்தி இப்படி தேங்காய் பால் செய்து சாப்பிட்டு பாருங்கள். உடலில் இருக்கும் கபம் அனைத்தும் நீங்கும்.

Samayal Kurippugal

இன்றைய காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால் ஒருவருக்கு ஏற்படக்கூடிய சளியும் இருமலும் மற்றொருவற்கு பரவி வீடு முழுவதும் சளி இருமல் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவிக்கொண்டே வருகிறது. இவற்றை தடுக்கவும் அதேசமயம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தேங்காயை பயன்படுத்தி இப்படி ஒரு பானத்தை தயார் செய்தால் போதும். அந்த தேங்காய் பாலை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்

தேங்காய் – 1/2 மூடி
ஏலக்காய் – 4
மிளகு – 2 ஸ்பூன்
சுக்கு – ஒரு துண்டு
பச்சரிசி – 1/4 கப்
நாட்டுச்சக்கரை – 1/2 கப்

– Advertisement –

செய்முறை

முதலில் பச்சரிசியை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேங்காயை துருவியோ அல்லது பொடியாக நறுக்கியோ மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஏலக்காய், மிளகு, சுக்கு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். சுக்கை நன்றாக இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் அது நன்றாக அரைப்படும்.

அடுத்ததாக நாம் அரை மணி நேரம் ஊற வைத்திருந்த பச்சரிசியையும் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி பால் மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி, வெல்லம் போன்ற ஏதாவது ஒன்றை போட்டு ஒரு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்ற வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கரையும் வரை அடுப்பில் இருந்தால் போதும். பிறகு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

– Advertisement –

அதே பாத்திரத்தை திரும்பவும் அடுப்பில் வைத்து வடிகட்டிய இந்த வெல்லக் கரைசலை ஊற்றி அதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் பாலையும் ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். இந்த சமயம் அடுப்பின் தீயானது குறைவாக இருக்க வேண்டும். அரை நிமிடத்திற்கு ஒருமுறை கரண்டியை வைத்து நன்றாக கலந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் இல்லை என்றால் அடிபிடித்து விடும். இது கொதிக்கக்கூடாது. கொதிக்கும் நிலை வரும் பொழுது அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். கடைசியாக துருவிய தேங்காயை போட்டு அனைவருக்கும் பருக கொடுக்கலாம்.

இதில் இருக்கக்கூடிய தேங்காய் பால் தாய்ப்பாலுக்கு இணையான சத்து மிகுந்தது என்பதால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். அதே சமயம் இதில் இருக்கக்கூடிய சுக்கு, மிளகு, ஏலக்காய் போன்றவை இருமல், சளி, ஜுரம் போன்ற அனைத்து விதமான தொற்று நோய்களையும் சரி செய்யக்கூடிய ஒரு அற்புதமான பானமாக இது திகழும்.

இதையும் படிக்கலாமே: புடலங்காய் தயிர் பச்சடி செய்முறை

உணவே மருந்து என்பதற்கு இணங்க எதற்கெடுத்தாலும் மருத்துவமனைக்கு செல்லாமல் இந்த முறையில் வீட்டிலேயே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.