Vikram : சினிமா துறையில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம். அந்த மாஸ் மற்றும் கெத்து காட்டும் அவரது நடை இதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கக் கூடிய விஷயம். சியான் என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விக்ரம்
1990இல் என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார். சினிமாவில் குடும்ப பேக்ரவுண்ட் எதுவும் இல்லாததால், ஆரம்ப காலகட்டத்தில் சிரமப்பட்டார். விபத்தில் சிக்கி தனது காலை இழக்கும் சூழலில் கூட தனது கனவை விடாமல் துரத்தி தமிழ் சினிமாவின் பாப் லிஸ்டில் இடம் பெற்றார்.
புது அப்டேட் :
சியான் விக்ரம் மகனான துருவம் தற்போது சினிமாவில் கலக்கி வருகிறார். தனது 59 வயதிலும் இருபது வயது போல் மாஸ் காட்டுகிறார் விக்ரம். தற்போது பல படங்கள் குவிந்து வருகிறது. மகனை விட அப்பா தான் மாஸ் காட்டுகிறார்.
இன்றளவும் மவுஸ் குறையாத விக்ரம் ராஜா மவுளி இயக்கத்தில் கதையை தேர்வு செய்ததாக கூறப்பட்ட வருகிறது. விக்ரமே அதை உறுதி செய்யும் வகையில் பேட்டியில் கூறியிருந்தார். கதை எல்லாம் தயாரான நிலையில் இன்னுமும் இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் கிடைக்கவில்லை.
சங்கர் இயக்கும் வேள்பாரி திரைப்படத்தில் விக்ரம் மற்றும் சூர்யா இணையும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இது மட்டும் இல்லாமல் வீர தீரன் சூரன் திரைப்படத்தின் பாகம்-2 விரைவில் வெளியாவதாக இருக்கிறது.
என்ன நிலையில் 96, மெய்யழகன் திரைப்படத்தை இயக்கிய வேல்ஸ் ஃபிலிம் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து விக்ரமுக்கு படங்கள் குவிந்து கொண்டிருக்கிறது. 59 வயதில் இந்த அளவுக்கு திரைப்படம் குவிவதை பார்த்து சினிமா வட்டாரம் அதிர்ச்சியில் உள்ளது.