Coolie-Lokesh: இப்போது உச்சபட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் என்றால் அது கூலி தான். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என இப்போதே உருட்டுகள் ஆரம்பித்துவிட்டது.
அதிலும் ரஜினி படத்தை பார்த்து குஷி ஆகிவிட்டார். லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டினார் என அடுத்தடுத்த செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே படத்திற்கு மிகப்பெரும் ஹைப் இருந்தது.
இதற்கு காரணம் படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, பாலையா, அமீர்கான் என பெரிய நடிகர்கள் எல்லோரும் இருக்கின்றனர். அதேபோல் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் கூட ரசிகர்களை கவர்ந்து விட்டது.
கூலி ட்ரெய்லர் வருமா வராதா.?
இது போதாது என்று சினிமா விமர்சகர்கள் படம் இப்படி அப்படி என ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகின்றனர். இதெல்லாம் பார்த்து பயந்து போன லோகேஷ் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் டீசர் ட்ரெய்லர் எதுவும் வேண்டாம் இந்த பிரமோஷனே போதும் என சொல்லி இருக்கிறார்.
ஆனால் சன் பிக்சர்ஸ் இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் வெளியீடு ஆகியவற்றை பெருசா செய்ய வேண்டும் என திட்டம் வைத்திருக்கின்றனர். அதனால் ட்ரெய்லர் வெளிவந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
லோகேஷ் இப்படி சொல்வதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஏனென்றால் தக் லைஃப் படம் வெளிவருவதற்கு முன்பு நாயகன் படத்தோடு ஒப்பிட்டு பயங்கர அலப்பறை இருந்தது .ப்ரோமோஷன் கூட கமல் அப்படித்தான் செய்தார்.
ஆனால் படம் வெளியான பிறகு பார்த்தால் அத்தனை எதிர்பார்ப்பும் வடிந்துவிட்டது. அது மட்டும் இன்றி சோசியல் மீடியாவில் பலத்த அடி வாங்கியது. இதை எல்லாம் பார்த்து தான் லோகேஷ் அடக்கி வாசிக்கலாம் என சொல்லி இருக்கிறார். ஆனாலும் சன் பிக்சர்ஸ் ப்ரமோஷனை பிரமாதமாக செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டது.