Sun Pictures: சன் பிக்சர்ஸ் ரஜினி, லோகேஷ் கூட்டணியில் கூலி வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. நாகார்ஜுனா, அமீர்கான் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் இணைந்துள்ளனர்.
அனிருத் இசையில் வெளிவந்த இரண்டு பாடல்களும் வரவேற்பை பெற்றுள்ளது. அதை தொடர்ந்து டீசர் ட்ரெய்லர் ஆகியவை எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதன்படி ஆகஸ்ட் இரண்டாம் தேதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்துவதற்கு சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. அதில் ரஜினி என்ன மாதிரியான கதை சொல்லப் போகிறார் என்பது பெரும் ஆர்வமாக உள்ளது.
நாகார்ஜுனாவுக்கு பறந்த அவசர உத்தரவு
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் அவசர அவசரமாக கூலி பட நடிகர்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்பி இருக்கிறது. அதாவது படம் பற்றி அதிக எதிர்பார்ப்பை தரும் தகவல்கள் எதையும் கூற வேண்டாம்.
பேட்டி கொடுப்பது என்றால் சாதாரணமாக பொதுவான விஷயங்களை சொன்னால் போதும் என கூறியிருக்கின்றனர். இதற்கு காரணமும் இருக்கிறது. அமீர்கான் நாகர்ஜுனா கடந்த சில வாரங்களாக பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.
அப்போது கூலி படத்தில் இருக்கும் சில ரகசியங்கள் கூட அம்பலமானது. ஒரு ப்ரமோஷனுக்காக கூட அவர்கள் இதை செய்திருக்கலாம். ஆனால் இதுவே நமக்கு வினையாக மாறிவிடக்கூடாது.
எல்லாம் அளவோடு இருந்தால் படம் நிச்சயம் வரவேற்பு பெறும் என சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. இப்போது வெளியான இரண்டு பாடல்களில் கூட ரஜினியை அவர்கள் காட்டவில்லை. அதனாலேயே தலைவரை பார்க்க வேண்டும் என்ற வெறி ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது.
அதை அப்படியே மெயின்டைன் செய்து ரிலீஸ் வரை கொண்டு சென்று விட வேண்டும் என்பது தயாரிப்பு தரப்பின் பிளான். அதேபோல் இசை வெளியீட்டு விழாவில் கூட நாம் எதிர்பார்க்காத சில சர்ப்ரைஸ் இருக்கும் என்கின்றனர்.