Actor King Kong : நகைச்சுவை நடிகரான கிங்காங்கின் மூத்த மகளான கீர்த்தனாவின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. கிங்காங் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பல மொழி படங்களில் நடித்துள்ள அவருக்கு சில காலமாக வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை.
இந்த சூழலில் தனது மூத்த மகனின் திருமணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், சிவராஜ்குமார் என முக்கிய பிரபலங்களுக்கு நேரில் சென்று பத்திரிக்கை வைத்திருந்தார். அதுவும் ஒரு குட்டி அம்பானி ரேஞ்சிக்கு தான் தனது மகனின் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
யார் யார் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்றோர் பங்கேற்காதது ஏமாற்றம் தான். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தமிழிசை சௌந்தர்ராஜன், அமைச்சர் ஜெயக்குமார் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கிங் காங் மகளின் திருமணத்திற்கு ஒரு லட்சம் மொய் வைத்த காமெடி நடிகர்
அதுவும் கிங்காங் வீட்டு திருமணத்திற்கு கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனராம். தேவயானி, பாக்யராஜ் போன்ற பிரபலங்கள் கூட்டத்தை பார்த்துவிட்டு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் திரும்பி விட்டனராம்.
அந்த அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் இருந்திருக்கிறது. இதில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் வைகைப்புயல் வடிவேலு ஒரு லட்சம் ரூபாய் மொய்யாக கிங்காங் மகளின் திருமணத்திற்கு வைத்துள்ளார். இது மிகப்பெரிய பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் கிங்காங் பத்திரிக்கை வைத்த போது பல பிரபலங்கள் பண உதவி செய்தனர். குறிப்பாக டி ராஜேந்தரிடம் பத்திரிக்கை வைக்கும் போது தனது படத்தில் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார். மேலும் கிங்காங் இவ்வளவு செல்வாக்கு மிக்கவரா என்பது அவரின் மகளின் திருமணம் மூலம் தான் தெரிய வந்திருக்கிறது.