Vijay : சினிமாவில் கொடி கட்டி பறந்த ஒரு நடிகன் திடீரென அரசியலுக்கு இறங்குவது சாதாரண விஷயம் அல்ல. தனது ஒட்டுமொத்த சினிமா பயணத்தையும் உதறிவிட்டு மக்களுக்காக அரசியலில் குதித்த விஜய். தமிழ்நாட்டில் விஜய் ரசிகர்கள் கூட்டம் எல்லாம் இப்போது அரசியல் கூட்டமாக மாறியுள்ளது.
2024 விஜய் தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். அரசியலுக்கு வந்த விஜய் தற்போது பல சூழ்நிலைகளை எதிர் கொண்டு இருக்கிறார். விஜய் அரசியலுக்கு வந்து தற்போது வரையிலும் செய்த நல்லவைகள் இன்னும் பேசப்படாத பொருளாக தான் இருக்கிறது.
TVK -வின் அனைத்து நடவடிக்கைகளிலும் பெண்களை முன்னிலைப்படுத்தினார். பாடசாலைக்கான பரிசு விழாக்களில் கல்வி முக்கியம் என நிலைநாட்டினார். பள்ளி மாணவர்களுக்கு போதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களை நல்வழி படுத்த நினைத்தார்.
சென்னை பகுதியில் நடந்த பெண்களுக்கு மீதான காவல்துறை தாக்குதலுக்கு எதிரான கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல்வாதியாக முழு ஆதரவையும் பெண்களுக்கு கொடுத்தார் விஜய், விவசாயத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
தமிழ்நாட்டில் 24 காவலாளிகள் மரணமடைந்ததை கண்டித்து பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். இதன் மூலம் மக்களின் வலிமையை வலியுறுத்தி பேசினார். இப்படி பல நல்ல விஷயங்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறார் TVK விஜய்.
ஆகஸ்ட் 25 ட்விஸ்ட் வைத்த விஜய்..
ஆகஸ்ட் 25 விஜய்க்கு லக்கி நாள் என்று கூறப்படுகிறது. விஷயம் என்னவென்றால், விஜய் தனது மனைவியை ஆகஸ்ட் 25, 1999 கரம் பிடித்தார். அதே நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி தான் நமது கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள்.
இப்படி இருக்கையில் தனது திருமண நாள் மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாள் ஆகஸ்ட் 25, TVK விஜய் தனது கட்சியின் மாநாட்டை மதுரையில் துவங்க உள்ளார் என்பது மிகப்பெரிய அதிர்ச்சி தான். அந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜய்க்கு இவ்வளவு ஸ்பெஷல் ஆ என்று,விஜயின் ஆதரவாளர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.