Dinesh: தமிழ் சினிமா தற்போது மிகப்பெரிய பட்ஜெட், 3 இலக்கத்தில் வசூல் என்பதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் வளர்ந்து வரும் ஹீரோக்களை கவனிக்க ஒரு கூட்டம் இருப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது.
அதிலும் இயக்குனர்கள் இறங்கி வந்து இந்த ஹீரோக்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்பதெல்லாம் மலைப்பான விஷயம் தான். அப்படி திறமை இருந்தும் இயக்குனர்களால் கண்டுகொள்ளப்படாத ஐந்து இளம் ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.
கண்டு கொள்ளப்படாத 5 இளம் ஹீரோக்கள்
தினேஷ்: 2012 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன அட்டகத்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் தினேஷ். கிட்டத்தட்ட 13 வருடங்களாக தினேஷ் நடித்து வரிசை கட்டி ரிலீசான படங்கள் என்று எதுவுமே கிடையாது.
ஆனால் தனக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை கச்சிதமாக பிடித்துக்கொண்டு சூப்பராக நடிக்க கூடிய நடிகர் இவர் என்று ஊர் அறிந்த விஷயம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இருந்தும் தினேஷுக்கு இதுவரை எந்த வாய்ப்புகளும் வரவில்லை.
ஹரிஷ் கல்யாண்: ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படங்கள் எல்லாம் நல்ல விமர்சனங்களை பெற்று விடும். ஆனால் இவருக்கு பட வாய்ப்பு என்பதோ அத்தி பூத்த கதை தான்.
பியார் பிரேமா காதல், தாராள பிரபு, பார்க்கிங் என்று இவர்கள் அடித்த படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும் இயக்குனர்களின் பார்வை இவர் மீது எப்போதாவது தான் விழும்.
கதிர்: மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள் போன்ற நல்ல கதை களங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் கதிர். இவர் நடித்த பரியேறும் பெருமாள் படம் இன்று வரை சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் கதிருக்கு பட வாய்ப்பு என்பது மட்டும் எட்டா கனி தான்.
சாந்தனு பாக்யராஜ்: காதல், காமெடி, சென்டிமென்ட் என அத்தனை காட்சியிலும் பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடியவர் சாந்தனு பாக்யராஜ். இவருக்கு நடனமும் கைவந்த கலை.
எப்போதாவது கிடைக்கும் பட வாய்ப்பு சரியாக பயன்படுத்திக் கொள்ளும் திறமைக்காரர். திரை கதைகளின் அரசன் பாக்யராஜின் மகனாக இருந்தும் சாந்தனுவுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது கடினமாகவே இருக்கிறது.
விக்ராந்த்: கோரிப்பாளையம், பாண்டியநாடு, பக்ரீத் போன்ற படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை கொட்டி தீர்த்தவர் நடிகர் விக்ராந்த். இவர் நடிகர் விஜயின் சொந்த சித்தி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும் விக்ராந்துக்கு அவருடைய நடிப்புக்கு ஏற்ற வாய்ப்பு இன்றுவரை கிடைக்கவில்லை. தற்போது மதராசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகாவது விக்ராந்தின் நிலைமை மாறுகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.